வியாழன், அக்டோபர் 28, 2010

பிபிசி தமிழோசை: தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா?

கடந்த சில நாட்களாகத் தமிழ் இணையத்தில் பரபரப்பாக இருந்து வந்த ஒரு செய்தி, இன்று காலை திராவிடர் கழகத்தலைவரும், விடுதலை ஏட்டின் ஆசிரியருமான வீரமணி அவர்களின் அறிக்கையால் பெரிதாக வெடித்துள்ளது.

மாண்புமிகு வீரமணி அவர்களின் அறிக்கை பற்றிய செய்திகள் இதோ:



http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42196

http://thatstamil.oneindia.in/news/2010/10/28/insert-sanskrit-unicode-font-tamil.html

இந்தப் பெருவெடிப்பு தமிழ்நாட்டின் ஏனைய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததோ இல்லையோ, இது போன்ற செய்திகளைப் பார்த்து நேயர்களுக்குச் செய்திகளை முறையாகத் திரட்டித் தரும் தமிழின் தலை சிறந்த வானொலியான பிபிசி தமிழோசையின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.


பிபிசி தமிழோசை செய்தியாளர் ஜெகதீசன், தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா என்ற தலைப்பில் இந்தச் சர்ச்சை குறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அதன் சுட்டி இதோ:

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/10/101028_unicodetamil.shtml

இது தொடர்பாக திரு ஜெகதீசன் என்னுடன் தொடர்பு கொண்டு ஒரு செவ்வியைப் பதிவு செய்தார். முழுச் செவ்வியின் சுட்டியும் இதோ:


http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2010/10/101028_unicodegranntha?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1




அவர் எனது கருத்துகளில் சிலவற்றை பிபிசி தமிழோசை முகப்பில் பதிவு செய்துள்ளார்:

செய்தி (நன்றி பிபிசி):

”தொழில் நுட்ப அடிப்படையிலும், மொழித்தேவையின் அடிப்படையிலும் இந்த கூடுதல் எழுத்துருக்கள் தமிழ் ஒருங்குறிக்குள் தேவையில்லை என்கிறார் கணினித்தமிழ் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட உத்தமம் என்கிற உலக தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரான மணி மு மணிவண்ணன்.

இந்த சர்ச்சைகுறித்து பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில், தமிழின் மொழியியல் தேவையை ஏற்கெனவே இருக்கும் அடிப்படை எழுத்துருக்களே ஈடுசெய்யவல்லது என்று கூறும் மணிவண்ணன், கூடுதலாக 26 கிரந்த எழுத்துருக்களை தமிழ் ஒருங்குறிக்குள் கொண்டுவருவது தேவையற்றது என்கிறார்.

அதேசமயம், இந்த விடயத்தை யூனிகோட் நிறுவனம், உணர்வுரீதியாக அணுகாது என்றும், வெறும் தொழில்நுட்ப பிரச்சினையாக மட்டுமே இந்த விடயத்தை அது பார்க்கும் என்றும் அவர் கூறினார்.”

தற்காலத் தொழில்நுட்பம் பற்றிய சிக்கல் ஒன்றை, எல்லோருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகப் பேசுவதற்கு நல்ல தமிழ்ப் பயிற்சியும் பட்டறிவும் தேவை.  பேரா. வா. செ. குழந்தைசாமி அவர்கள் எத்தகைய சிக்கலான நுட்பச் செய்தியையும் தங்குதடையில்லாமல் ஆற்றொழுக்குப் போல, அதே நேரத்தில் ஒரு மிடுக்கான அரச நடைத் தமிழில் பேசுவதில் வல்லவர்.  பல முறை அவரது பேச்சுக்களைக் கேட்டு வியந்திருக்கிறேன்.  சில முறை அவரது பேச்சுக்களை வானொலிக்காகப் பதிவு செய்திருக்கிறேன்.  அவரது ஆற்றல் எனக்கு இல்லை என்றாலும், அவரது பேச்சுக்களைக் கேட்டதன் தாக்கத்தினால், இந்தச் செவ்வியில் என்னால் ஓரளவுக்குப் பேச முடிந்தது.  இந்த செய்தியை முன் பின் கேட்டிராதவர்களுக்கு நான் சொன்னது புரிந்திருக்குமா எனத் தெரியவில்லை.

இந்தச் சிக்கலைப் பற்றி விவரமாக எழுதிப் பதிவு செய்ய எண்ணியுள்ளேன்.

செவ்வியைக் கேட்பவர்கள் நான் சொன்ன கருத்துகளைப் பற்றி மறுமொழியை இங்கே பதிவு செய்தால் மகிழ்வேன்.

புதன், அக்டோபர் 20, 2010

Top Five Regrets of the dying


என் கல்லூரி நண்பர் ஒருவர் கீழ்க்கண்ட கட்டுரையை அனுப்பினார்:
இறப்பின் மடியில் இன்றோ நாளையோ என்று முடிவை எதிர்நோக்கி வாழும் மக்களின் நிறைவேற முடியாத வருத்தங்களைப் பற்றி அப்படிப் பட்ட மக்களுக்கு அவர்களின் இறுதிநாட்களில் பணிவிடை விடை செய்திருந்த எழுத்தாளர் பிரான்னி வாரி என்ற பெண் உணர்ந்து எழுதியிருக்கிறார்.
அப்படிப் பட்ட வருத்தங்களில் தலையாய ஐந்து வருத்தங்கள் என்ன?
1. மற்றவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழாமல், என் நெஞ்சறிய உண்மையாக வாழத் துணிந்திருக்கலாம்.
2. வேலையில் இவ்வளவு கடுமையாக உழைக்காமல் இருந்திருக்கலாம்
3. என் உண்மையான உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டும் துணிச்சல் இருந்திருக்கலாம்.
4. நண்பர்களோடு தொடர்பு விட்டுப்படாமல் வாழ்ந்திருக்கலாம்.
5. மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க வழிவிட்டிருக்கலாம்.
இறப்பின் மடியில் எழும் வருத்தங்கள் நம் அடையாளத்தைக் காட்டுபவை என்பது உண்மைதான்.  ஆனால், என்னுடைய கண்ணோட்டம் சற்று வேறுவிதமானது.

பெயர் தெரியாத போதையாளர்கள் ( Alcholics Anonymous ) குழுவினரின் இறை வணக்கப் பாடலின் கருத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.
"Serenity Prayer" adopted by Alcholics Anonymous:
...
God, grant us the...
Serenity to accept things we cannot change,
Courage to change the things we can, and the
...Wisdom to know the difference
Patience for the things that take time
Appreciation for all that we have, and
Tolerance for those with different struggles
Freedom to live beyond the limitations of our past ways, the
Ability to feel your love for us and our love for each other and the
Strength to get up and try again even when we feel it is hopeless.
அதை விட, கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே” பாடல், இன்னும் கூடுதலாகவே பிடிக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே, முனிவின்
இன்னா தென்றலு மிலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல்பொருது இரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

- கணியன் பூங்குன்றன்

All towns are home towns, all people are our kin
Neither good fortune nor any harm come to us from others
Grief and reconciliation are likewise
Even death isn't new
We don't celebrate life as sweet
Nor do we cringe that life is hurtful
Just as a ferry hurries along the
Wild rapids fuelled by the
Great rains with thunder
Dodging and weaving through
The mighty rocks of a mountain pass
Life is but random
And those that have realized this
After deep contemplation
Neither praise anyone as Great
And certainly never put down
Anyone as less worthy

நாம் எல்லோருமே நம்மைச் சுற்றி நடப்பதைப் பொருத்து, நமக்கு அப்போது என்ன தெரிந்திருந்திருந்ததோ அதைப் பொருத்து, நம் அப்போதைய உணர்வுகளைப் பொருத்து, நம் மரபணுக்கள் நம்மை ஆட்டுவிப்பதைப் பொருத்து, நாம் வளர்ந்த விதம் நம் பட்டறிவைப் பொருத்து, நாம் வாழும் பண்பாட்டின் வரையறைகளைப் பொருத்து, அந்த நேரத்தில் எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்கிறோம்.  இதற்கு வருந்தத் தேவையில்லை.  வாழ்க்கை என்ற சீட்டாட்டத்தில் நமக்கு வந்து விழுந்த சீட்டுகளை நமக்குத் தெரிந்த வரையில் ஆடுகிறோம்.  அவ்வளவே!

So, all of us do what we do at the time we do with the information that we had and the emotional state in which we find ourselves in because at that particular moment that appeared to be the best choice. No regrets. Those are the cards that life dealt us and we play the hand we are dealt to the best of our ability.

பெயர் தெரியாத போதையாளர்கள் ( Alcholics Anonymous ) பாடலைச் சற்று மாற்றி

God, grant us the...
Serenity to accept things we cannot change,
Even if you may be but a figment of my imagination.
என்று கும்பிடலாம்.