ஞாயிறு, ஜனவரி 15, 2012

சென்னைப் புத்தகக் காட்சி 2012ல் இதுவரை நான் வாங்கிய நூல்கள்:

சென்னை புத்தகக் காட்சி 2012க்கு நான் இதுவரை இருமுறை சென்றாயிற்று.

முதல்முறை கையில் தூக்கி வர முடிந்தவரையில் வாங்கினேன்.  இரண்டு மணி நேர நடையில் பாதிக் காட்சி கூடப் பார்க்க முடியவில்லை.  ஆங்கிலப் பதிப்பகங்களை முழுக்க முழுக்க ஒதுக்கி விட்டேன்.  பெருவணிகப் பதிப்பகங்களில் நெரிசல் கூடுதலாக இருந்ததால் எட்டிப் பார்த்து விட்டு ஒதுங்கி விட்டேன்.  அதிலும் நான் வாங்கக் கூடிய புத்தகங்களைப் பெருநிறுவனங்கள் வெளியிடத் தயங்கலாம்.  ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைப் பதிப்பகங்களையும் எட்டிப் பார்த்தேன்.  அவற்றோடு ஒப்பிடும்போது சென்னை, மதுரை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிப்பகங்கள் எவ்வளவு பின் தங்கியிருக்கின்றன என்பதற்கு ஒரு அளவுகோல் வேண்டாமா?  அதுதான்.  நாம் பல நூற்றாண்டுகள் பின் தங்கியிருக்கிறோம் போலிருக்கிறது.

நல்ல ஆராய்ச்சி நூல்களைத் தக்க முறையில் பிழையில்லாமல் வெளியிட வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களால்தான் முடிகிறது.  இந்திய அரசின் வெளியீடுகள் நல்ல தரத்தில் இருந்தாலும், பத்து இருபது ஆண்டுகளுக்குள் அவை நிலை குலைந்து போய் விடுகின்றன.  நான் அவர்களிடமிருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அச்சடித்த, 30-50 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட நூல்களைத்தான் வாங்க நேரிட்டது. இந்த நூல்களையும் வெளிநாட்டுப் பதிப்பகங்கள் போல் நல்ல தரமான பதிப்பில் வெளியிடும் நாள் வராதா என்று காத்திருக்க வேண்டியிருக்கிறது.

முன்னெப்போதையும் விட இப்போது படிப்பவர்களும், நூல்களைச் சொந்தமாக விலை கொடுத்து வாங்குபவர்களும் கூடியிருக்கிறார்கள்.  தமிழிலேயே உயர்ந்த விலையில் தரமான தாளில் அச்சிட்டு வெளியிடும் பதிப்பகங்கள் வந்துள்ளன.  அதனால், என் ஆசை நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை.

இது வரை 50 நூல்களை வாங்கியுள்ளதாகப் பட்டியல் போட்டுள்ளேன்.  வீடு நிறையப் புத்தகங்களைக் குவித்து வைத்திருப்பதால், மேலும் புத்தகங்களை வாங்கிக் குவிக்கும்போது ஆராய்ச்சி மணி அடிப்பது கேட்கிறது. 

”சரி, சரி, வாங்கன புத்தகத்துல எத்தனை புத்தகத்தைப் படிச்சு முடிச்சிட்டீங்க? என்ன கேள்வி கேக்கலாமா? தேர்வுக்குத் தயாரா? எல்லோரும் அறிஞர், பொறிஞர்னு சொல்றாங்களாமே? எங்க என் டெஸ்ட்லே பாஸ் பண்ணுங்க பாப்போம்?”  என் வாழ்க்கைத்துணை நலம் அன்புடன் கேட்கிறார். :-)

”சரி, சரி, நீ இது வரை வாங்கிய துணியை எல்லாம் உடுத்துவதற்குள் நான் வாங்கிய புத்தகங்களைப் படித்து விடுவேன்!” என்று “நகைச்சுவை” ததும்ப புத்திசாலித்தனமாய்ப் பதில் சொன்னேன்.

“யோவ், இது உனக்கே ரொம்ப ஓவராய்த் தெரிய்ல?” என்று முறைத்து விட்டுக் கிளம்பினார் இல்லத்தரசியார்.

சூடு கொஞ்சம் கூடுதலாய் இருந்ததால், காப்பி போடக் கேட்கும் சமயம் இதுவல்ல என்று என் மரமண்டைக்கும் உறைத்து. :-)

சரி, சரி, உங்கள் வீட்டுச் சண்டை புராணம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம், என்ன புத்தகங்கள் வாங்கினீர்கள் என்று நீங்கள் கேட்பதும் காதில் விழுகிறது.

இதோ அந்தப் பட்டியல்.

சென்னைப் புத்தகக் காட்சி 2012ல் இதுவரை நான் வாங்கிய நூல்கள்:



1. காவல் கோட்டம், சு. வெங்கடேசன், தமிழினி பதிப்பகம்
2. அ. முத்துலிங்கம் கதைகள், அ. முத்துலிங்கம், தமிழினி பதிப்பகம்
3. சிலம்பின் காலம், இராம கி., தமிழினி பதிப்பகம்
4. பண்டைத் தமிழ் எழுத்துக்கள், தி. நா. சுப்பிரமணியன், உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
5. தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும், புலவர் கோவேந்தன், வேமன் பதிப்பகம்
6. தமிழ் எழுத்தின் வரிவடிவம், சி கோவிந்தராசனார், உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
7. இராசேந்திரசோழன் வெளியிட்ட எசாலம் செப்பேடுகள், ச கிருஷ்ணமூர்த்தி, உலகத்தமிழாராய்ச்சி நிலையம்
8. சோழர் காலச் செப்பேடுகள், மு. ராஜேந்திரன், அகநி வெளியீடு
9. தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதிகள் 1, 2, ச கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் தமிழாய்வகம்
10. கல்வெட்டுகள் கூறும் உண்மைகள், தி வை சதாசிவ பண்டாரத்தார், மணிவாசகர் பதிப்பகம்
11. கல்வெட்டுகளில் கன்னித்தமிழ், கவிக்கோ ஞானச்செல்வன், தென்றல் நிலையம்
12. கல்லெழுத்துக்கலை, நடன காசிநாதன், மணிவாசகர் பதிப்பகம்
13. கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி, சி கோவிந்தராசன், மதுரை காமராசர் பல்கலை
14. எழுத்தியல், சூ இன்னாசி, பாரி புத்தகப் பண்ணை
15. நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும், அ தாமோதரன், (இ)க்ரியா
16. கணக்கதிகாரம், Institute of Asian Studies
17. Build your Web Home, Nayyar and Sharma, NISCOM, Govt. of India
18. உங்கள் வெப் ஹோம் உண்டாக்குங்கள், ஷர்மாவும் நைய்யரும், இந்திய அரசு
19. தமிழக வரலாறு மக்களும் பண்பாடும், கே கே பிள்ளை, உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
20. தமிழ்நாட்டு வரலாறு பாண்டியப் பெருவேந்தர் காலம், தமிழ் வளர்ச்சித்துறை
21. அரங்கேற்றுகாதை ஆராய்ச்சி, வெ மு ஷாஜகான் கனி, உலகத் தமிழாராய்ச்சி நிலையம்
22. தொல்லியல் நோக்கில் காஞ்சிபுர மாவட்டம், ச கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம்
23. சிலப்பதிகார மூலமும் அடியார்க்கு நல்லாருரையும், உ.வே.சா. நூல்நிலையம்
24. பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், உ.வே.சா. நூல்நிலையம்
25. குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சா. நூல்நிலையம்
26. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி, மெய்யப்பன் பதிப்பகம்
27. தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு, இராசு பவுன் துரை, மெய்யப்பன் பதிப்பகம்
28. தஞ்சை இராஜராஜீஸ்வரம் விமானத் திருக்கற்றளி கட்டடக்கலை மரபு, இராசு பவுன் துரை, மெய்யப்பன் பதிப்பகம்
29. தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம், நடன காசிநாதன், மெய்யப்பன் பதிப்பகம்
30. சமணத்தடயம் (தொகுப்பு), பதிப்பாசிரியர்கள் நடன காசிநாதன், மா சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம்
31. நடுநாட்டுச் சமணக்கோயில்கள், த ரமேஷ், மெய்யப்பன் பதிப்பகம்
32. தமிழில் சொல்லாக்கம், ச இராசேந்திரன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
33. சங்கு, ந அதியமான், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
34. நிகமம், அதியமான், துளசேந்திரன், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை
35. A Glossary of Standardized Technical Terms in Linguistics English-Tamil, Rangan & Chandrasekaran, Tamil University, Thanjavur
36. Tamil Cultural Connections across the world, V Selvakumar, Tamil University, Thanjavur
37. ஊழிக்கூத்து, வெளி ரங்கராஜன், ஆழி பதிப்பகம்
38. காண முடியாக் கனவு, ரவிக்குமார், ஆழி பதிப்பகம்
39. எனது ஊர் நூல்வரிசை - வேலூர், மா குணசேகரன், ஆழி பதிப்பகம்
40. ஆங்கிலம் - தமிழ் சொற்களஞ்சியம், சிதம்பரநாதன் செட்டியார், சென்னைப் பல்கலைக்கழகம்
41. Devadasi System in Medieval Tamil Nadu, K Sadasivan, அகநி வெளியீடு
42. Foreign Notices of South India, K A Nilakanta Sastri, University of  Madras
43. சி என் அண்ணாதுரை - நவபாரதச் சிற்பிகள் தொடர், பி. சி. கணேசன், பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்,  இந்திய அரசு
44. Ajanta Murals, Ed. Ghosh, Ph. Tiwari, Arch. Survey of India, 1996
45. South Indian Paintings, C Sivaramamurti, Publications Division,  Government of India, 1994
46. Some Aspects of Indian Culture, C Sivaramamurti, Publications Division,  GoI, 1994
47. Vijayanara Paintings, C Sivaramamurti, Publications Division, GoI, 1985
48. Guler Painting, Randhawa and Randhawa, Publications Division, GoI, 1982
49. Kangra Paintings on Love, Randhawa, Publications Division, GoI, 1994
50. பாலாவின் அரசியல் கருத்துப்படங்கள், கார்ட்டூனிஸ்ட் பாலா, குமுதம் பதிப்பகம்

8 கருத்துகள்:

rasikai சொன்னது…

"இதுவரை ... வாங்கிய" என்ற தொடர் திகைப்பளிக்கிறது!

இனியும் எத்தனை நூல்கள் வாங்கத் திட்டமோ?!

K R A Narasiah சொன்னது…

ஆச்சரியம்தான்! வாழ்க உங்கள் நூல் வாங்கும் பழக்கம். நானும் இருமுறை சென்றுவந்தேன். நன்றாகவே உள்ளது. முதல் ஒரு முறை பிரான்சு நாட்டிலிருந்த ஒரு மாதுடன். அவருக்குத் தமிழ் தெரியும் அவரும் நிறையவே வாங்கினார். அடுத்தமுறை நமது சுபாஷிணியும் டாக்டர் பத்மாவதியுடனும்.
மகிழ்ச்சியாக இருந்தது.நரசய்யா

Mayooranathan சொன்னது…

உங்கள் பட்டியலில் காணப்படும் நூல்கள் என்னுடைய ஆர்வத்துறைகளுக்குள்ளும் அடங்குகின்றன. ஒவ்வொரு முறையும் சென்னைக்கு வரும்போது நூல்கள் வாங்குவது எனது வழக்கம். உங்கள் பட்டியலில் உள்ள நூல்களில் 30% ஆவது என்னிடம் உள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் குறைந்தது 15ல்லு மேற்பட்ட தடவைகள் சென்னைக்கு வந்துள்ளேன். ஆனால் ஒருபோதும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் வேளைகளில் அங்கு நிற்கக் கிடைப்பதில்லை. இரண்டு மூன்று தடவைகள் ஓரிரு நாட்கள் இடைவெளிகளில் தவறவிட்டிருக்கிறேன்.

இ. மயூரநாதன்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

ரசிகை! :-). அதற்கு மேலும் இன்னொரு 12 நூல்களை வாங்கியுள்ளேன். பட்டியல் போட வேண்டும். இன்றுதான் காட்சியின் கடைசிநாள்.

நரசையா அவர்களுக்கு, நன்றி. புத்தகம் வாங்கும் பழக்கம் தமிழ்நாட்டில் வெகுவாக முன்னேறியிருப்பதைப் புத்தகக் காட்சியில் காண முடிந்தது. மகிழ்ச்சியாக இருந்தது. உலகின் எந்தக் கருத்தாய் இருந்தாலும் அது தமிழுக்கு வந்து சேர்ந்து விடுகிறது. :-)

மயூரநாதன், மிக்க நன்றி.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

பொத்தகக் காட்சியில் இராம.கி.வாங்கியவை.

விடியல் பதிப்பகம்

1. பதிற்றுப் பத்து ஐங்குறுநூறு சில அவதானிப்புகள் - ராஜ் கௌதமன்

சேகர் பதிப்பகம்:

2. கல்வெட்டில் தேவார மூவர் - பேரா. கா.ம. வேங்கடராமையா
3. சிலம்பின் காலம்? - முனைவர் செ.கோவிந்தன்
4. சிலம்பின் காலம் மீண்டும் ஒரு விளக்கம் - டாக்டர் செல்லன். கோவிந்தன்
5. புறநானூறும் வரலாறும் - ப.மகேஸ்வரி
6. தமிழ் இசையில் புதிய கண்டுபிடிப்புகள் - முனைவர் செ.அ.வீரபாண்டியன்
7. தமிழக வரலாற்றில் இருளும் ஒளியும் - முனைவர் செல்லன்.கோவிந்தன்

கீழைக்காற்று நூல்வெளியீட்டகம்

8. தொல்காப்பியத்தின் காலம் - குணா
9. தமிழின மீட்சி - குணா
10. குணா பாசிசத்தின் தமிழ் வடிவம் - அ.மார்க்ஸ், கோ.கேசவன்
11. தமிழ் வடமொழி இலக்கண உறவு - முனைவர் த. அஜி

கிழக்குப் பதிப்பகம்

12. கர்நாடக சங்கீதம் ஓர் எளிய அறிமுகம் - மகாதேவன் ரமேஷ்

தமிழினி

13. மார்க்சிய மெய்யியல் - இராசேந்திர சோழன்

அலைகள் வெளியீட்டகம்

14. இந்திய தத்துவ இயல் ஓர் எளிய அறிமுகம் - தேவிபிரசாத் சட்டோபாத்யாயா
15. இந்திய தத்துவ மரபும் மார்க்சிய இயக்கவியலும் - நா.வானமாமலை

பாரி நிலையம்

16. யாப்பருங்கலக் காரிகை - மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை
17. பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும் - உ.வே.சா. நூல்நிலையம்

அன்னம்

18. சிலப்பதிகாரத் திறனாய்வுகளின் வரலாறு - டாக்டர் க.பஞ்சாங்கம்

மெய்யப்பன் பதிப்பகம்

19. இந்தியத் தத்துவக் களஞ்சியம் - 3 தொகுதிகள் - டாக்டர் சோ.ந.கந்தசாமி
20. பழந்தமிழகம் - ம.ரா.போ.குருசாமி
21. கல்லெழுத்துக் கலை - நடன. காசிநாதன்

திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

22. தமிழ்ச் சொற்பொருள் வரலாறு - புலவர் இரா. இளங்குமரன்

New Century Book House

23. தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு - பி.எல்.சாமி
24. சங்க காலம். தொல்பொருள் ஆய்வுகள் - தொகுப்பு மு.காமாட்சி
25. புறநானூற்று ஆய்வுகள் - தொகுப்பு நைசி.கரிகாலன்
26. சங்க கால அரசு உருவாக்கம் - மெய்ப்பாட்டியல் அணுகுமுறை ஆய்வு - முனைவர் ஜெ.சியாமளா

காந்தளகம்

27. இராவணன் நாடு மத்தியப் பிரதேசம் - அகத்திய தாசன்

தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

28. முத்தும் பவளமும் - ருத்ர.துளசிதாஸ்
29. நிகமம் வணிக வரலாற்றாய்வுகள் - முனைவர் ந.அதியமான், முனைவர் ஆ.துளசேந்திரன்
30. நாவாய் கடல்சார் வரலாற்றாய்வுகள் - முனைவர் ந.அதியமான், முனைவர் ஆ.துளசேந்திரன்
31. சங்கு - ந.அதியமான்
32. சிந்து சமவெளி நாகரிகமும் தமிழர் நாகரிகமும் - எஸ்.குருமூர்த்தி
34. Tamil Cultural Coonections across the world - Dr.V.Selvakumar

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

35. கடலடியில் தமிழர் நாகரிகம் - நந்திவர்மன்
36. பழந்தமிழும் கிளை மொழிகளும் - முனைவர் கலைவாணி
37. உலக மொழிகளில் தமிழ்ச்சொற்களும் இலக்கணக் கூறுகளும் - ப.சண்முகசுந்தரம்
38. பழந்தமிழில் அறிவியல் - முனைவர் க. பலராமன்
39. அரசகுலச் சான்றோர் வரலாறும் மதுரைக் காஞ்சியும் - நெல்லை நெடுமாறன், ஆ. தசரதன்
40. காஞ்சிபுரம் கி.பி.6 ஆம் நூற்றாண்டிற்கு முன் - முனைவர் கு.பகவதி
41. அரங்கேற்று காதை ஆராய்ச்சி - முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி

Motilal Banarsidas

42. Buddhist India - T.W.Rhys Davids
43. Sarva darsana sangraha of Maadavaachaarya - E.B.Cowell and A.E.Gouch
44. Classical Sankya An interpretation of its history and meaning - Gerald James Larson
45. Bharadvajas in ancient India - Thaneswar Sarmah
46. Pain and its ending The four Noble truths in the theravaada Buddhist Canon - Carol S.Anderson
47. Malwa through the ages - Kailash Chand Jain

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

இராமகி குடும்ப அறக்கட்டளை மூலம் ஒவ்வொன்றும் 14 படிகளாக சொந்த ஊரைச் சுற்றி அமைந்துள்ள 14 பள்ளிகளின் நூலகங்களுக்கு அனுப்பும் வகையில் புதுச்சேரி நன்மொழிப் பதிப்பகத்தின் வழியாக வாங்கிய சிறுவர் கதைப் பொத்தகங்கள்

பட்டியல்
1. 300 நன்னெறிக் கதைகள்
2. பழமொழிக் கதைகளும் பழமொழி விளக்கக் கதைகளும்
3. சிறுவர்களுக்கான தெனாலிராமன் கதைகள்
4. தமிழ்நாட்டுத் தெனாலிராமன் கதைகள்
5. வங்கத்துத் தெனாலிராமன் கதைகள்
6. இலங்கைத் தெனாலிராமன் கதைகள்
7. புத்தர் சொன்ன கதைகள்
8. பீர்பால் கதைகள்
9. அப்பாஜி கதைகள்
10. மரியாதைராமன் கதைகள்
11. பரமார்த்தகுரு கதைகள்
12. தேவதைக் கதைகள்
13. பூனை இளவரசனும் ஆமை இளவரசனும்
14. நகைச்சுவைக் கதைகள்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

நண்பரும் பெருங்கவிஞருமான ஹரிகிருஷ்ணன் மின் தமிழ் குழுவில் (http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/4ce437e229139b0e) பரிந்துரைத்திருக்கும் நூல்:

ராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள கி வா ஜகந்நாதன் பதிப்பைப் பற்றி ஏற்கெனவே
சொல்லியிருக்கிறேனே. இதில் பரிமேலழகர் உரையை அடிப்படையாகக் கொண்டு, இந்த உரையிலிருந்து மணக்குடவர், காளிங்கர், கவிராஜ பண்டிதர், எல்லிஸ் துரை போன்றவர்கள் உரை எங்கெல்லாம் மாறுபடுகிறது என்று விவரமாகத் தரப்பட்டுள்ளது.
உரை மாறுபாடு என்று குறிக்கப்படாத இடங்களில் (அல்லது உரை மாறுபாடு என்று குறிக்கப்பட்டுள்ள இடங்களில் இடம்பெறாத உரையாசிரியர்) மற்ற உரையாசிரியர்கள்
பரிமேலழகருடன் உடன்படுகிறார்கள் என்பது பொருள்.

நூலின் பெயர்: திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு. பதிப்பாசிரியர் கி வா
ஜகந்நாதன். ராமகிருஷ்ண மடம் வெளியீடு.
விலை : ரூ 400/

Sri Ramakrishna Math
No 16, Ramakrishna Mutt Road,
Mylapore,
Chennai - 600004

கையில் வைத்துக் கொண்டு படிக்க முடியாத அளவுக்கு அளவில் பெரியதும் தடிமனானதுமான புத்தகம். இதற்காக இதன்
பதிப்பாசிரியர் உழைத்திருக்கும் உழைப்புக்கு 400 ரூபாய் என்பது விலை என்ற கணக்கிலேயே வராது.
--
அன்புடன்,
ஹரிகி.

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

மின் தமிழில் நு த லோகசுந்தரம் எழுதியது:

புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு நான் வாங்கிய நூல்கள்
மூலம் மட்டும் (ஆய்வாளர்களுக்கு) தனிப் பயன்பாடிற் கென்று
வெளிவந்துள்ள* மக்கள்* பதிப்புக்களில்
ஒரே மாபெரும் தொகுப்புகளாகக் கொண்டது
(glazed colourfull bound edition )
மெய்யப்பன் /மணிவாசகர் பதிப்பகம்
ச வே சுப்பிரமணியம் பதிப்பாசிரியர்
(௧)
சங்கள் நூல்கள் முழுதும் 8 + 10 + 18 உடன்
சிலம்பு மணிமேகலை தொல்காப்பியம்
இறையனார் அகப்பொருள் முதொள்ளாயிரம்
கொண்ட மாபெரும் பதிப்பு
= "செவ்வியல் தமிழ் நூல்கள்" 8 + 10 + 18 + 5 41 நூல்கள்
>>>ரூ 555 /-

(௨)
தமிழ் இயல் (இலக்கண) நூல்கள் யாவும்
தொல்காப்பியம் முதல் 19 -௨௦ ஆம் நூற்றாண்டு வெளிவந்த
பாட்டியல்கள் வரை உள்ளன >>>>>>>>> 51
இயல்நூல்கள் >>>ரூ 450 /-
பக்கங்கள் zzzzz
(௩)
அனைத்தும் தமிழில் வந்த 18 நிகண்டுகள்
பாகம் 1 >>>ரூ 450 /-
பாகம் 2
>>>ரூ 450 /-

கம்ப இராமாயணம் முழுதும்>>>ரூ 350 /-
ஆக மொத்தம் நூல்கள் >>>>>>>>>
மொத்தம் >>>>>>>
ரூ 2255 /- மட்டும்
(ஆனால் 20 சதம் விலைக் கழிவுடன் தான் வாங்கினேன்)
இந்த 5 நூல்களையும் இருகையால் எடுத்துச் செல்ல 2 பெரிய
பைகள் தேவைப் பட்டது
இதே பதிப்பினில் சென்ற ஆண்டு (என் தங்கை MA BEd தமிழ்
ஆசிரியை (ஓய்வு) சைவத்தின் 12 திருமுறை
18000 + பாடல்கள் கொண்டதை
வாங்கினாள்
ரூ 400 /- மட்டும்