தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் செய்வது கிட்டத்தட்ட ஒரு குடிசைத் தொழிலாகி விட்டது. இதை நையாண்டி செய்து நான் மார்ச் 2, 2010ல் ஒரு வலைப்பூவைப் பதிந்தேன். அப்போது எழுத்தாளர் பேரா. இந்திரா பார்த்தசாரதி நகைச்சுவையுடன் ”விளையாட்டுக்குக்கூட இப்படிச் செய்யாதீர்கள். செம்மொழி மாநாட்டில் தீர்மானம் போட்டு ஏற்றுக் கொண்டு விடப் போகிறார்கள்” என்று எச்சரித்தார்! அண்மையில் நான் கிண்டல் செய்ததைப் போலவே ஒரு எழுத்துச் சீர்திருத்த முன்மொழிவு கண்ணில் பட்டது. முதலில் எனது கோணல் பார்வை உங்கள் கண்ணுக்கு:
http://kural.blogspot.com/ 2010/03/blog-post.html
http://kural.blogspot.com/
எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில் மக்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்! எழுத்துகள் இன்றைய நிலையை அடைய எத்தனை நூற்றாண்டுகள் ஆகின, என்னென்ன பிழைகளைக் கடந்து படிப்படியாக இந்த நிலையை அடைந்தன என்பதைப் பற்றி இவர்கள் எண்ணுவதே இல்லை. யூனிகோடு குறியீட்டுமுறை வந்து இன்னும் 25 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால், தொடக்கத்தில் இருந்தே அவர்கள் நிலை பிறழாமையை (stability principle) ஒரு குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கணினிக் குறியீட்டுக்கே இது தேவை என்றால் மனிதர் மொழிக்கு எவ்வளவு தேவை?
இதோ நான் கிண்டல் அடித்தது போன்ற புதிய பரிந்துரைகள் (அவை எனதல்ல!)
இதோ நான் கிண்டல் அடித்தது போன்ற புதிய பரிந்துரைகள் (அவை எனதல்ல!)
இதோ மேற்கண்ட குறியீட்டில் உள்ள ஓர் ஆவணம்: