புதன், அக்டோபர் 20, 2010

Top Five Regrets of the dying


என் கல்லூரி நண்பர் ஒருவர் கீழ்க்கண்ட கட்டுரையை அனுப்பினார்:
இறப்பின் மடியில் இன்றோ நாளையோ என்று முடிவை எதிர்நோக்கி வாழும் மக்களின் நிறைவேற முடியாத வருத்தங்களைப் பற்றி அப்படிப் பட்ட மக்களுக்கு அவர்களின் இறுதிநாட்களில் பணிவிடை விடை செய்திருந்த எழுத்தாளர் பிரான்னி வாரி என்ற பெண் உணர்ந்து எழுதியிருக்கிறார்.
அப்படிப் பட்ட வருத்தங்களில் தலையாய ஐந்து வருத்தங்கள் என்ன?
1. மற்றவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழாமல், என் நெஞ்சறிய உண்மையாக வாழத் துணிந்திருக்கலாம்.
2. வேலையில் இவ்வளவு கடுமையாக உழைக்காமல் இருந்திருக்கலாம்
3. என் உண்மையான உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டும் துணிச்சல் இருந்திருக்கலாம்.
4. நண்பர்களோடு தொடர்பு விட்டுப்படாமல் வாழ்ந்திருக்கலாம்.
5. மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க வழிவிட்டிருக்கலாம்.
இறப்பின் மடியில் எழும் வருத்தங்கள் நம் அடையாளத்தைக் காட்டுபவை என்பது உண்மைதான்.  ஆனால், என்னுடைய கண்ணோட்டம் சற்று வேறுவிதமானது.

பெயர் தெரியாத போதையாளர்கள் ( Alcholics Anonymous ) குழுவினரின் இறை வணக்கப் பாடலின் கருத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.
"Serenity Prayer" adopted by Alcholics Anonymous:
...
God, grant us the...
Serenity to accept things we cannot change,
Courage to change the things we can, and the
...Wisdom to know the difference
Patience for the things that take time
Appreciation for all that we have, and
Tolerance for those with different struggles
Freedom to live beyond the limitations of our past ways, the
Ability to feel your love for us and our love for each other and the
Strength to get up and try again even when we feel it is hopeless.
அதை விட, கணியன் பூங்குன்றனாரின் “யாதும் ஊரே” பாடல், இன்னும் கூடுதலாகவே பிடிக்கும்.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோர் அன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே, முனிவின்
இன்னா தென்றலு மிலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல்பொருது இரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

- கணியன் பூங்குன்றன்

All towns are home towns, all people are our kin
Neither good fortune nor any harm come to us from others
Grief and reconciliation are likewise
Even death isn't new
We don't celebrate life as sweet
Nor do we cringe that life is hurtful
Just as a ferry hurries along the
Wild rapids fuelled by the
Great rains with thunder
Dodging and weaving through
The mighty rocks of a mountain pass
Life is but random
And those that have realized this
After deep contemplation
Neither praise anyone as Great
And certainly never put down
Anyone as less worthy

நாம் எல்லோருமே நம்மைச் சுற்றி நடப்பதைப் பொருத்து, நமக்கு அப்போது என்ன தெரிந்திருந்திருந்ததோ அதைப் பொருத்து, நம் அப்போதைய உணர்வுகளைப் பொருத்து, நம் மரபணுக்கள் நம்மை ஆட்டுவிப்பதைப் பொருத்து, நாம் வளர்ந்த விதம் நம் பட்டறிவைப் பொருத்து, நாம் வாழும் பண்பாட்டின் வரையறைகளைப் பொருத்து, அந்த நேரத்தில் எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்கிறோம்.  இதற்கு வருந்தத் தேவையில்லை.  வாழ்க்கை என்ற சீட்டாட்டத்தில் நமக்கு வந்து விழுந்த சீட்டுகளை நமக்குத் தெரிந்த வரையில் ஆடுகிறோம்.  அவ்வளவே!

So, all of us do what we do at the time we do with the information that we had and the emotional state in which we find ourselves in because at that particular moment that appeared to be the best choice. No regrets. Those are the cards that life dealt us and we play the hand we are dealt to the best of our ability.

பெயர் தெரியாத போதையாளர்கள் ( Alcholics Anonymous ) பாடலைச் சற்று மாற்றி

God, grant us the...
Serenity to accept things we cannot change,
Even if you may be but a figment of my imagination.
என்று கும்பிடலாம்.

12 கருத்துகள்:

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

மின் தமிழ் குழுமத்திலிருந்து:

From: devoo
Date: Wed, 20 Oct 2010 06:21:40 -0700 (PDT)

///நாம் எல்லோருமே நம்மைச் சுற்றி நடப்பதைப் பொருத்து, நமக்கு அப்போது என்ன தெரிந்திருந்திருந்ததோ அதைப் பொருத்து, நம் அப்போதைய உணர்வுகளைப் பொருத்து, நம் மரபணுக்கள் நம்மை ஆட்டுவிப்பதைப் பொருத்து, நாம் வளர்ந்த விதம் நம் பட்டறிவைப்
பொருத்து, நாம் வாழும் பண்பாட்டின் வரையறைகளைப் பொருத்து, அந்த நேரத்தில் எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்கிறோம். இதற்கு வருந்தத்
தேவையில்லை.வாழ்க்கை என்ற சீட்டாட்டத்தில் நமக்கு வந்து விழுந்த
சீட்டுகளை நமக்குத் தெரிந்த வரையில் ஆடுகிறோம்///

யதார்த்தமான பேச்சு;


ஆனால் இழப்பும் வலியும் எல்லை மீறும்போது ஒரு மீள்பார்வை தவிர்க்க முடியாததாகிறது. மரபணுக்கள் பழங்கணக்கை அலசுவதற்கு உந்துகின்றன .இப்படிச் செய்திருக்கலாம்; இதை இதைத் தவிர்த்திருக்கலாம் என எண்ணத் தலைப்படுகிறான்; சில சமயம் சுற்றி இருப்போரும் தூபம் போடுவர்

தேவ்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

From: Innamburan Innamburan
Date: Oct 20, 9:02 pm
To: மின்தமிழ்


மணிவண்ணனின் '...இறப்பின் மடியில் இன்றோ நாளையோ என்று முடிவை எதிர்நோக்கி
வாழும் மக்கள்...' என்பது வேறு. பிரான்னி வாரி கூறும் 'palliative care'
வேறு. முதலது மன நிலையாக இருக்கலாம். இரண்டாவது, 'இனி மருத்துவம் செய்ய
ஒன்றுமில்லை, வலியை குறைக்கலாம், பண்புடன் நடத்துவோம் என்ற வகை. அநேகமாக
புற்றுநோய் போன்றவை ஒருவரை 'palliative care'க்கு தள்ளலாம். என்
அனுபவத்தில், கிருத்துவ கன்யாஸ்திரீகளைப்போல் அவர்களுக்கு ஆதரவு
கொடுப்பவர்கள் அரிது. அலிப்பு, சலிப்பு இல்லாமல், நாற்றத்தைக்கூட, மனைவி
மக்களை விட சகித்துக்கொண்டு, பணியாற்ற எங்கு தான் கற்றுக்கொண்டார்களோ?
அன்னை தெரஸா கூட இந்தப்பணியில் ஈடுபட்டார். 'palliative care' நிலைக்கு
வந்தவர்கள், அநேகமாக, எதிலும் ஆர்வம் காட்டமாட்டார்கள். வலி நிவாரணம்;
விடுதலை. அவை தன் இலக்கு. அத்தருணம், ஒரு நிம்மதி கூட உண்டு. பிரான்னி
வாரியின் பின்னணி இத்துறையில் குறைவாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.
அவருடைய பட்டியல் ஒரு inspirational; அவ்வளவு தான். palliative care
background is less in her profile.

இந்த கேள்விகளை கேட்பவர்கள் முதல் வகை, முதுமை, தள்ளாமை, ஆனால் 'இறப்பின்
மடியில் இன்றோ நாளையோ' எந்த நிலைமையில் அல்ல. அவற்றை பார்ப்போம்.

1. 'மற்றவர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப வாழாமல், என் நெஞ்சறிய உண்மையாக
வாழத் துணிந்திருக்கலாம்.' சிறுவயதிலேயே இது பாடமாகி இருக்கும்,
பெற்றோர்களும் ஆசான்களும் அறிவுரை அளித்தால், இந்த துணிவு. 30 வயதில்
இந்த ஞானம் பெற்றவர்களை எனக்கு தெரியும்.

2. 'வேலையில் இவ்வளவு கடுமையாக உழைக்காமல் இருந்திருக்கலாம்.' அது அவரவர்
வேலை, ஆர்வத்தை பொறுத்தது. என்னைக்கேட்டால், இன்னும் செம்மையாக பணி
புரிந்திருக்கலோமோ என்று தான் சொல்வேன்.

3. 'என் உண்மையான உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டும் துணிச்சல்
இருந்திருக்கலாம்.' அல்பாசை, அகம்பாவம். தேவையில்லை, தனக்குத்தானே,
உண்மையாக இருந்தவனுக்கு.

4. 'நண்பர்களோடு தொடர்பு விட்டுப்படாமல் வாழ்ந்திருக்கலாம்.' உண்மை.

5. 'மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்க வழிவிட்டிருக்கலாம்.' யாருக்கு?

Serenity Prayer பற்றி யாராவது கேட்டால், பார்க்கலாம். இந்த ஐந்து
கேள்விகளுக்கு பின்னால் இருப்பது 'தன்னிரக்கம்' வேண்டாமே.

இன்னம்பூரான்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

From: Tthamizth Tthenee
Date: Oct 20, 9:20 pm
To: மின்தமிழ்


உண்மை கடந்த காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை விடுத்து இனி இருக்கும் நாட்களில் எப்படி இருக்கவேண்டும், எப்்டி வாழவேண்டும் என்று யோசிப்பது
பலனளிக்கும்

தன்னிரக்கம் ஆளைக்கொல்லும் வியாதி

அது தேவையே இல்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

From: mmanivannan
Date: Oct 20, 10:22 pm
To: மின்தமிழ்


இன்னம்பூரான் ஐயா,

திருத்தங்களுக்கு நன்றி.

பிரான்னி வாரியின் கட்டுரையில்

“For many years I worked in palliative care. My patients were those
who had gone home to die. Some incredibly special times were shared. I
was with them for the last three to twelve weeks of their lives.”

என்று குறிப்பிட்டிருந்தார். இறுதி மூன்று வாரம் முதல் பன்னிரு வாரம்
வரை அவர்களோடு அவர் இருந்தார் என்ற செய்தியை மட்டும் வைத்துக் கொண்டு
அவர்கள் இன்றோ நாளையோ என்ற இறுதிக் கட்ட நிலைக்குள் வந்தவர்கள் என்று
கருதியது தவறுதான்.

Palliative care is not synonymous with Hospice care. இறுதிக் கட்ட
அரவணைப்பிலும் வலி குறைப்பு மருத்துவம் உண்டுதான் என்றாலும் இரண்டும்
ஒன்றே அல்ல என்பதை நினைவூட்டியதற்கு நன்றி.

வலி குறைப்பு மருத்துவத்தில் மனவுளைச்சலைக் குறைப்பதுவும் ஒரு தேவைதான்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் ஏன் என்ற கேள்வி எழுந்தாலும், இப்படி
இந்த ஐந்து கேள்விகளே பலரையும் உளைச்சல் படுத்தியிருப்பதை வைத்து,
இளமையிலேயே இந்தப் பாடங்களைக் கற்றுக் கொண்டால் என்ன என்ற எண்ணத்தில்
பிரான்னி வாரி இதை எழுதியிருக்கிறார்.

ஆனால், இது மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ நீதி நூல்களைப்
படித்திருந்தாலும், நாம் ஒவ்வொருவரும் தனித்தனித் தீவுகள் தாம். செய்ய
வேண்டியது என்ன என்பதைச் சரியாகத் தீர்மானிக்கும் தன்மை நமக்கு உண்டு
என்பது கூட ஒருவிதத்தில் மாயைதான். Free will is almost certainly an
illusion. அப்படி என்றால் கொலைகாரனைத் தூக்கிலிடுவது சரியா தவறா என்ற
வாதத்துக்கு நான் வரவில்லை.

But the degrees of freedom that each individual has are quite limited
and thus the real choices are even more limited. So, why carry the
guilt or regret the decisions, long after we have faced the
consequences, or worse, others may have endured consequences of our
decisions?

நம் நெஞ்சுக்குச் சரியாகத் தோன்றியதைச் செய்திருக்கலாம் என்றால் எந்த
நெஞ்சுக்கு என்ற கேள்வி எழுகிறது. எனது பத்து வயது நெஞ்சுக்குச் சரி
என்று தோன்றியது இருபது வயது நெஞ்சுக்கு ஒத்து வந்திருக்காது. இருபது
வயதில் கொடி பிடிக்கும் நாம், முப்பது வயதுக்குப் பின், உலகத்தோடு ஒத்து
வாழ் என்று மாறி விடுகிறோம். நாம் மனிதர்கள். மாறிக் கொண்டே
இருக்கிறோம். இருந்தோம். இருப்போம். நமக்குச் சரி என்று பட்டதைச்
செய்ததால் பிறர் துன்பமுறுவதைத் தாங்கும் தன்மையும் கூடவே இருந்திருக்க
வேண்டும். அது எளிதா? அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ சமரசங்கள் செய்ய
வேண்டியிருக்கிறது. நம்முடைய வரம்புகளைப் பொருத்து எதை விட்டுக் கொடுக்க
முடியாதோ அதை மட்டும் தவிர்க்கப் பார்க்கிறோம். மற்றவர்களுக்குத் தீங்கு
வரக்கூடாது என்பதற்காக நாம் துன்பப் படத் துணிவோமா? ஆமாம். சில
நேரங்களில். சிலருக்காக. எது சரி, எது தவறு?

நம்முடைய சிறுவயது அறியாமைக்காக, முதுமையில் அதைப் பற்றி வருந்த
வேண்டுமா? தன்னிரக்கம் கொடியது.

இறப்புப் படுக்கையில் யாரும் தான் இன்னும் கூட அலுவலில் கூடுதலாக
உழைத்திருக்கலாம் என்று நினைக்கப்போவது கிடையாது. இருந்தாலும், அலுவலில்
கூடுதல் நேரம் இருக்க வேண்டிய கட்டாயத்தைப் புறக்கணித்து அதன் பின்
விளைவுகளை எதிர் கொள்ளும் வலிமை பலருக்கும் இருக்காது. சான்றோர்
பழிக்கும் வினையா இது? சில கடமைகள், காலத்தின் கட்டாயங்கள். அல்லது
அப்போது கட்டாயம் என்று தோன்றியவை. பிற்காலத்தில் அது அவ்வளவு பெரிதாகத்
தோன்றியிருக்காது.

இந்தப் பட்டியலில் உள்ள எதையும் வேண்டும் என்றே யாரும் செய்வதில்லை.
நமது அறநூல்களும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் கற்பிக்கும் பாடங்களில்
இது புலப்படும். இருப்பினும், இன்னும் ஒரு நூற்றாண்டு கழித்து இது போன்ற
ஒரு காப்பகத்தில் கருத்துக் கணிப்பு எடுத்தாலும், இதே ஐந்து கேள்விகள்
மீண்டும் முதல் வரிசையில் நின்றாலும் நான் வியப்படைய மாட்டேன்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

From: Subashini Tremmel
Date: Oct 22, 12:31 am
To: மின்தமிழ்


வித்தியாசமான ஒரு பகிர்வு திரு.மணிவண்ணன். பலமுறை யோசிக்க வைக்கும் subject
இது.

அன்புடன்
சுபா

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

From: mmanivannan
Date: Oct 22, 9:43 am
To: மின்தமிழ்


நன்றி சுபாஷினி.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கும் இறை
மறுப்பாளர்களுக்கும் இறப்பை அணுகும் முறை வேறாக இருக்கும். அதிலும், மறு
பிறவி நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இது மட்டுமே நமக்குள்ள ஒரே பிறவி,
இறப்பிற்குப் பின் ஒன்றும் இல்லை என்று எண்ணுபவர்களுக்கும் வேறுபாடுகள்
கூடுதலாக இருக்கும்.

இது மட்டுமே வாழ்க்கை என்பவர்களுக்குத் தன்னிரக்கம் கூடுதலாக
இருக்கலாம். மறு பிறவி பற்றிய நம்பிக்கை உள்ளவர்களோ, கணினியை அணைத்து,
அதிலிருக்கும் தரவுகளை அழித்து, புதிய வார்ப்பை எடுப்பது போல புதுப்
பிறவியிலாவது இந்த ஆட்டத்தைச் சரியாக ஆடுவோம் என்ற நம்பிக்கை இருக்கக்
கூடும்.

“என் வழி, தனி வழி” என்ற தன்னம்பிக்கை (அல்லது அகம்பாவம்)
கொண்டவர்களுக்கு இது ஏதுமே பொருட்டல்ல.

என்னைப் பொருத்தவரையில் வாழ்வின் இறுதியை எதிர் கொண்டிருப்பவர்கள், தம்
முடிவுகளால் மற்றவர்கள் வாழ்க்கையைச் சிதைத்திருந்தால், அதை உணர்ந்து,
அவர்களிடம் வருத்தம் தெரிவிப்பது நல்லது. முடிந்தால், தம் பிழைகளைத்
திருத்திக் கொள்ளவும் முயலலாம். ஆனால், தன் வாழ்க்கையே முடிந்து
கொண்டிருக்கும்போது இன்னொருவர் வாழ்க்கையைப் பற்றி நினைக்கக் கூடியவர்கள்
வெகு சிலரே.

மரண பயம் அப்படிப் பட்டது.

மரணமில்லாப் பெருவாழ்வு, மரணத்துக்குப் பின் மறுபிறவி, மரணத்துக்குப்
பின் இறைவனின் மடியில் என்ற ஆறுதல் அளிக்கும் கற்பனைகள் மரண பயத்துக்கு
ஓரளவு மருந்தாகலாம். ஆனால், அடிப்படையில் எல்லா மனிதர்களுக்குமே, இந்த
வாழ்வுக்குப் பின் ஏதும் இல்லாமல் போகலாம் என்ற எண்ணம் தோன்றாமல்
இருக்காது. வாழ்வு ஒரு முறைதான் என்ற நிலையில் நாம் இதைச்
செய்திருக்கலாமே, அதைச் செய்திருக்கலாமே என்ற ஆதங்கம் தவிர்க்க
முடியாதது.

மரணத்தின் மடியில்தான் பெரும்பாலோர் வாழ்வைப் புரிந்து கொள்ளத்
தொடங்குகிறோம். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை இளமையிலேயே புரிந்து
கொண்டவர்களும் மரணத்தை எதிர்நோக்கும் போது நாம் நிறைவாக வாழ்ந்தோம் என்று
நிம்மதியாகத் தலை சாய்க்கிறார்களா என்ன?

சிந்தனைக்குரிய தலைப்புதான்.

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
சென்னை, தமிழ்நாடு

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

From: rajam
Date: Oct 22, 10:18 am
To: மின்தமிழ்


எனக்கென்னவோ இந்த
எழுத்தாளர் பிரான்னி வாரி
அம்மாவோ அவரைப்
பின்பற்றுபவர்களோ
ஒரு சின்ன குழப்பம்
தருவதாகத் தோன்றுகிறது.

ஆங்கிலத்தில் "regret"
என்பதற்கும் "wish"
என்பதற்கும் இந்த அம்மா
ஒட்டுப்போடுவதுபோல்
தெரிகிறது. அது தமிழ்
உணர்வுகளுக்குப்
பொருந்தாது.
தமிழ் மொழியிலும் தமிழ்ப்
பண்பாட்டிலும் அவை
வெவ்வேறான உணர்வுகள்.
நம் தமிழ்க்கருத்துலகில்
"விருப்பம்" "வேட்கை"
"வருத்தம்" என்பன தனித்தனி
உணர்வுகள்.

அன்புடன்,
ராஜம்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

From: coral shree
Date: Oct 22, 10:28 am
To: மின்தமிழ்


ஆழ்ந்த சிந்தனை.......மரணபயம் குறித்த தங்களின் விளக்கம் நிதர்சனமாகத்தான்
தோன்றுகின்றது.......

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

From: Tthamizth Tthenee
Date: Oct 22, 10:43 am
To: மின்தமிழ்


மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும் மாறிவிடாது சமூதாயம்

என்னும் வரிகள் நினைவுக்கு வருகிறது

ராமாயண வைராக்கியம்,ப்ரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் மூன்றுமே
கணநேரத்துக்கு மட்டுமே இருக்கும் நீர்க் குமிழிகள்,

ஆத்திகரோ,நாத்திகரோ ரத்தம் சுண்டி இயலாமை வரும்போது ஆத்திகம் ,நாத்திக,
என்னும் இரு நிலைகளைக் கடந்து பற்றிக்கொள்ள ஏதேனும் கிடைக்குமா என்று தேடத்
தொடங்குகிறார்கள்,

கடைசீ நேரத்தில் ஆத்திகமும், நாத்திகமும் எதுவுமே உதவுவதில்லை
காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்று ஏற்கெனவே சொல்லிவைத்துப்
போயிருக்கிறார்கள்

ஆகவே மரனத்தைப் பற்றி யோசிப்பதைக் கட்டிலும் இருக்கும் வரை யாரூக்கேனும் உதவி
செய்யும் மனப்பான்மையோடு வாழ்ந்தால்
இறக்கும் நேரத்தில் ஒரு தெளிவு வரும்

நாம் யாருக்கும் த்ரோகம் செய்யவில்லை, முடிந்த அளவு உதவியிருக்கிறோம்
என்னும் எண்ணம் ஒன்றினால்தான் மரண நேரத்தில் நமக்கு சற்றேனும் ஆறுதல்
கிடைக்கும் என்பது என் எண்ணம்

ஆகவே வாழ்வோம் ,இறக்கும் வரை வாழ்வோம், இறக்கும் வரை என்று நான் சொல்வது
நினைவு தப்பும் கடைசீ வினாடி வரைக்கும் பொருந்தும்

அதற்கு
நாம் யாருக்கும் த்ரோகம் செய்யவில்லை, முடிந்த அளவு உதவியிருக்கிறோம்
என்னும் எண்ணம் மட்டுமே உதவும்

அன்புடன்
தமிழ்த்தேனீ

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

From: Innamburan Innamburan
Date: Oct 22, 1:00 pm
To: மின்தமிழ்


பிரான்னி வாரி 'குழப்பத்தை' என்னால் இயன்றவரை நீக்க முயன்றேன்.
மணிவண்ணனும் ஓரளவு 'palliative care' பற்றி அந்த அம்மை அறிந்தது குறைவே
என்று ஒத்துக்கொண்டார். 'மரண பயம்' வேறு. 'palliative care' நிலை வேறு.
இன்னம்பூரான்

மணி மு. மணிவண்ணன் சொன்னது…

From: "N. Kannan"
Date: Oct 22, 6:38 pm
To: மின்தமிழ்


அன்பின் மணிவண்ணன்:

அன்றே எழுத நினைத்து நேரமில்லாமல் போனது.

கம்போடியா போயிருந்தபோது ஒரு மென்மையான பிலிபினோ கிறிஸ்தவ மாதுவை
(மருத்துவர்) சந்தித்தேன். அவர் என்னை அவர்களது மருத்துவக் குழுவிற்கு
அறிமுகப்படுத்தினார். அது சமயம் அவர்களது இயக்குநர் எல்லோரையும் ஒரு மரண
உயில் எழுதச் சொன்னார். அதாவது நாம் இறந்துவிடுகிறோம். நாமே நமக்கு
இரங்கல் சொல்கிறோம். பொதுவாக ஒருவர் இறந்துவிட்டால் அவரைப் பற்றி நல்லது
சொல்வது வழக்கம். அதுபோல், நம்மைப் பற்றிய நல்லதுகளை முதலில் எழுதி, நாம்
செய்ய விட்ட செயல்கள் எதுவென்றும் எழுதினால், அது வாழ்விற்கு நம்பிக்கை
தருவதுடன், விட்டுப் போன ‘செய்ய வேண்டிய’ காரியங்களை செய்யவும் உந்துதலாக
இருக்குமென்று அறிந்து கொண்டோம்.

மரணத்திடம் பேரம் பேச முடியாது. எனவே பொய்யே சொல்லாமல் நியாயமாக நம்மை
நாமே பார்த்துக்கொள்ள இயலுமா? வாழ்வின் சவால்களுள் அதுவுமொன்று. வாழ்வு
பொய்மையும், பாசாங்குத்தனமும் நிரம்பியது!

க.

Yazhini சொன்னது…

இறப்பின் மடியில் இருந்தவர்களின் கடைசி வாக்கியங்கள் என்று எப்போதோ படித்தது. அதில் ஒருவர் மட்டும் 'இன்றைக்கு வரவு எவ்வளவு ?' என்று கேட்டிருந்தார். மற்ற அனைவருடைய சொற்களும் அன்பு, அமைதி குறித்ததே. இறக்கும் அந்த கடைசி காட்சியில் யார் யார் வந்து போவர் ? எந்த நினைவுகளை உள்ளம் விரும்பும் ? தாயின் மடியும், மனைவியின் முத்தமும், குழந்தையின் புன்னகையும் நம்மை ஆட்கொள்ளுமா ?

கணியன் பூங்குன்றனார் இறக்கும் தருவாயில் அந்த பாடலை எழுதியிருப்பாரோ ?