மலையாள நடிகர் ஜெயராம் பிதற்றியிருக்கிறார் (தமிழ்ப்பெண்களை அவதூறாக பேசிய நடிகர்).
நடிகர் ஜெயராமின் பிதற்றலில் எண்ணற்ற தவறுகள் உள்ளன.
- ஒரு முதலாளி தன் வீட்டு வேலைக்காரியைப் பெண்டாள எண்ணுவது
- ஒரு வேலைக்காரி தமிழ்ப்பெண் என்பதை இழிவாக எண்ணுவது
- கருப்பான பெண் என்ற நிறவெறியைக் கொண்டிருப்பது
- எருமை போன்றவள் என்று அவரைப் பழித்தது
என்ற எல்லாமே முட்டாள்தனமான முரட்டுச் செயல்கள்.
- அப்படிப் பட்ட நடிகனுக்குத் தமிழ்நாட்டில் சென்ற இடமெல்லாம் கருப்புக் கொடி காட்டலாம்.
- அவன் படம் ஓடும் திரையரங்குகள் முன்பு மறியல் செய்யலாம்.
- அவன் வீட்டுக்கு முன் தேர் உயரத்துக்குக் கருப்பு எருமை கட் அவுட் ஒன்றை அவன் முகச்சாயலில் வைக்கலாம்.
ஆனால், ஒரு சில தமிழர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? ( பார்க்க:
நடிகர் ஜெயராம் வீடு மீது தீப்பந்தம் ... -
நடிகர் ஜெயராம் வீடு மீது நேற்று மாலை தீப்பந்தம் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அலுவலகம் எரிக்கப்பட்டதுடன், காரும் . ... 8 பேர் கைது செய்யப் பட்டனர். அவர் டைரக்டரும், நடிகருமான சீமானின் நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறினார்கள்... |
)
ஆனால், செய்ய வேண்டியதை எல்லாம் விட்டு விட்டு, பொறுக்கித்தனமாக அந்த நடிகன் வீட்டை, அவன் இல்லாதபோது தாக்கி, அலுவலறையை எரித்து, அவன் மனைவி மக்களை மிரட்டுவது தமிழனுக்குப் பெருமை தரும் செயலா என்ன?
இதைச் செய்த பொறுக்கிகள் சீமான் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தினத்தந்தியில் படித்தபோது வேண்டுமென்றே சீமானின் இயக்கத்தைப் பழிக்கிறார்களோ என்றுதான் நான் முதலில் எண்ணினேன்.
ஆனால், பகலவன் என்பவரின் வலைப்பூவில் இன்று வந்த பதிவு (கருணாநிதிக்கு மானமுள்ள உடன்பிறப்பின் அவசர கடிதம்! ) என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பகலவனின் சொல்லடிகளிள் சிலவற்றை இப்பதிவின் கீழே போட்டிருக்கிறேன்.
நம்முடைய தன்மானத்துக்குப் போராடுபவர்கள் மற்றவர்களைத் தூற்றுவதும், இழிவான சொற்களைக் கொட்டுவதும் நம் பண்பாட்டுக்கு ஒவ்வாதது என்று யாராவது இந்தப் பகலவனுக்குச் சொல்லவேண்டும்.
இவரது பதிவைப் பார்க்கும்போது, சீமானின் நாம் தமிழர் இயக்கம் இத்தகைய செயலைக் கொண்டாடுகிறது என்றே கொள்ள வேண்டியிருக்கிறது.
இதற்கும், மும்பையில் வந்தேறிகள் என்று சொல்லி மற்றவர்களை மிரட்டும் தாதாக்களின் செயலுக்கும் என்ன பெருத்த வேறுபாடு உள்ளது? இப்படி மிரட்டிப் பணம் பறிக்கும் கூட்டம் என்றுதான் நாம் தமிழர் இயக்கத்தின் மீதும் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது.
முன்னர் தங்கபாலு, இப்போது ஜெயராம்.
இருவருமே கண்டிக்கத் தக்கவர்கள்தாம்.
ஆனால், இப்படிப் பட்ட பொறுக்கித்தனமான செயல்களால், அவர்கள் செய்த தவறு அடிபட்டுப் போய் தமிழர்கள் மதிப்புதான் கெடுகிறது.
சீமான், தன் இயக்கத்தின் பெயரை "நாம் தமிழர்" என்று வைத்துக் கொள்ள விரும்பினால், தமிழனுக்கே உரிய பண்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இல்லையேல், "நாம் குண்டர்கள்" என்று வைத்துக் கொண்டு குண்டர் செயலைத் தொடரட்டும்.
ஜெயராமின் சொற்களை விட சீமானின் குண்டர்கள் செயல் நம்மைத் தலை குனிய வைக்கிறது.
சீமானின் குண்டர்கள் செயலைப் போலவே சீமானின் பரப்புரையாளர்களின் தரம் குறைந்த சொற்கள் தமிழன் என்ற அடையாளத்தையே இழிவாக்குகிறது.
உண்மையிலேயே தமிழர்கள் எதிர்காலம் பற்றி அக்கறை கொள்பவர்கள் இவை போன்ற குண்டர் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும்.
ஈழத்தமிழர்களின் நிலை கண்டு துடித்து ஆள்வோரின் சிறுமை கண்டு பொங்கியெழுந்தவர்களுக்குத் தலைமை வகுத்தவர் சீமான். அவர், இந்த இளந்தமிழர்களுக்கு நல்ல வழி காட்டாமால் கீழ்த்தரமான செயல்களைக் கண்டிக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. தலைமைப் பொறுப்புக்கு ஒவ்வாதது.
ஈழத்தமிழர்களின் நிலை கண்டு துடித்து ஆள்வோரின் சிறுமை கண்டு பொங்கியெழுந்தவர்களுக்குத் தலைமை வகுத்தவர் சீமான். அவர், இந்த இளந்தமிழர்களுக்கு நல்ல வழி காட்டாமால் கீழ்த்தரமான செயல்களைக் கண்டிக்காமல் இருப்பது வருந்தத்தக்கது. தலைமைப் பொறுப்புக்கு ஒவ்வாதது.
இனமானம் வேறு, இனவெறி வேறு.
"தமிழர்கள் பல நாட்டில் வாழ்பவர்கள்... எல்லா நாடுகளிலும் சிறுபான்மையினர்" என்பார் பேரா. வா. செ. குழந்தைசாமி. பல நாடுகளில் தமிழர்களும் வந்தேறிகள்தாம். அதை உணர்ந்து பொறுப்பாக எழுதவேண்டும், பேசவேண்டும், நடந்து கொள்ளவேண்டும்.
சீமானின் கும்பல்களின் வெறியாட்டத்தையும், இழிசொற்களையும், பண்பாடுள்ள தமிழ் உலகம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
--- On Sat, 6/2/10, பகலவன் wrote:
தமிழ் நாடில் உள்ள உனக்கு முதுகு எலும்பு கிடையாது ,கருநாயே நீ என்னடா இந்த மலையாள நாயை மன்னிக்க. நீ என்ன தமிழர் பிரிதிநிதியா? சொட்ட கருநாய்நிதி. தமிழின துரோகி என எல்லோரும் உங்களை திட்டுவார்கள்.
நாங்கள் மனமுள்ள சீமானாக இருக்க வேண்டாம்.ஆனால் எங்களை இலவசத்தின் பெயரில் கோமாளியாக அல்லவா வைத்து இருக்கிறிர்கள்.நீங்கள் வாழ்க நீடுடி வாழ்க.கடைசியாக உங்க வாயில் பால் ஊற்ற வேண்டும் என்று இந்த உடன்பிறப்புக்கு ஆசை.முடியுமா தறுதலை தலைவா!