கீழ்க்கண்ட கடிதத்தை மின் தமிழ், தமிழ் மன்றம், தமிழ் உலகம் என்ற மடலாடற்குழுக்களுக்கு அனுப்பி இருந்தேன். முதலில் கடிதத்தையும் பின்னர், அதற்கு வந்த பின்னூட்டங்களையும் தருகிறேன்.
டிஸ்லெக்சியா (Dyslexia) என்னும் எழுத்துக்குழப்பம் சிலருக்கு இருக்கிறது. பொதுவாக இந்திய மொழிகளின் எழுத்துகள் ஒலியன் அடிப்படையில் அமைந்திருப்பதால் அத்தகைய குழப்பங்கள் குறைவு. இந்தக் குழப்பங்கள் இடவல மாற்றங்களாலும் நடப்பவை. தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் இட வல மாற்றம் ஆனாலும், வேறு எழுத்தோடு குழம்ப வாய்ப்பில்லை. ஆங்கிலத்தில் b என்ற எழுத்தும் d எழுத்தும் இட வல மாற்றம் நேர்ந்தால் குழம்பிக் கொள்ள நேரிடும்.
தமிழ்நாட்டில் என்னுடன் பள்ளியில் படித்தவர்கள் எவருக்கும் இத்தகைய எழுத்துக் குழப்பம் இருந்ததில்லை. அமெரிக்காவில் இது சற்றுக் கூடுதல். (பார்க்க: http://www.readfaster.com/education_stats.asp ). ஏனென்றால் ஆங்கிலத்தின் எழுத்து முறை அப்படிப் பட்டது. ஒலிப்புக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு மேம்போக்கானது (Orthographically shallow). இந்திய எழுத்துகள் பொதுவாக ஒலிப்புக்கும் எழுத்துக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவை. (Orthographically deep). ஆனாலும், அவற்றிலும் சிக்கல்கள் உள்ளன. தேவநாகரியில் கூட்டெழுத்துகள் ஏராளம். அவை அனைத்தையும் மனனம் செய்வது சற்றுக் கடினம். அவற்றிலும் இட வல மாற்றக் குழப்பங்கள் நேரிடலாம். தமிழ் எழுத்துகள் பல ஒலியன்களைச் சுட்டக் கூடியவை. காக்கை, காகம், தங்கம், சென்னை, பச்சை, பசை, இஞ்சி என்ற சொற்களில் க, ச என்ற எழுத்துகளின் ஒலியன்கள் இடத்துக்கு ஏற்றவாறு மாறுபவை. இதைத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எளிதில் கற்றுக் கொண்டாலும், தமிழை மூன்றாம் மொழியாகக் கற்கும் பிறநாட்டினருக்கு இது குழப்பம் தரும். இத் தன்மையால் எழுத்துக் குழப்பமும் வரலாம்.
பொதுவாக Orthographically deep script இருக்கும் மொழியில் டிஸ்லெக்சியா குறைவு. Orthographically shallow script உள்ள மொழியில் கூடுதல். (பார்க்க: http://en.wikipedia.org/wiki/Orthographies_and_dyslexia#The_effects_of_orthographic_depth_on_dyslexia ) ஆங்கிலம், இத்தாலிய மொழி இரண்டுக்கும் எழுத்து பொதுவாக இருந்தாலும், இத்தாலிய மொழியில் எழுத்துக்கும் ஒலிக்கும் உள்ள தொடர்பு சற்று நெருக்கமே. ஆனால், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் லத்தீன் எழுத்துகளை இரவல் வாங்கியதால் அவற்றில் ஒலிக்கும் எழுத்துக்கும் உள்ள நெருக்கம் குறைவு. எனவே இவற்றில் எழுத்துகள் Orthographically shallow என்பார்கள். அதனால் இத்தாலிய மொழியை விட பிரெஞ்சு, ஆங்கில மொழிகளில் எழுத்துக் குழப்பம் கூடுதலாக இருக்கும்.
தற்போது இந்தியாவில் பல இடங்களிலும் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தில் டிஸ்லெக்சியா நோய் இருப்பதைக் கண்டு பிடித்து அதற்கு ஏற்ற முறைகளில் கற்பிக்க முயன்று வருகிறார்கள். அதில் தமிழ்க் குழந்தைகளையும் பிற நாட்டுக் குழந்தைகளோடு ஒப்பிட்டு வருகிறார்கள். ஆனால் இத்தகைய ஆராய்ச்சிகளில் இந்தக் குழந்தைகளுக்குத் தமிழில் எழுதும்போது எழுத்துக் குழப்பம், டிஸ்லெக்சியா இருக்கிறதா என்று ஆய்பவர்கள் வெகு சிலரே.
எம்.ஜி.ஆர். தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்த பிறகு, தமிழில்
டிஸ்லெக்சியா கூடி இருக்க வேண்டும். னை,ணை,லை போன்ற எழுத்துகள் எழுத்துக் குழப்பத்தைக் கொடுப்பவை. பழைய எழுத்து முறையில் இத்தகைய குழப்பங்கள் வராது. இது போதாது என்று இன்னும் எழுத்துச் சீர்திருத்தம் செய்தால் குழந்தைகள் கற்பது எளிதாகும் என்பவர்கள், இந்த டிஸ்லெக்சியா பற்றிய ஆராய்ச்சியைப் படித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
இதன் தொடர்பாக, தமிழில் இட வல மாற்ற எழுத்துக் குழப்பங்களைக் காணும்போதெல்லாம் நான் திரட்டத் தொடங்கியுள்ளேன்.
இன்று கூட ஒரு கடிதத்தில் தருகிறேன் என்பதற்கு தருகேரீன் என்று ஒருவர்
எழுதியிருந்தார். இது போல எழுத்துக் குழப்பங்கள் தங்கள் கண்களில் பட்டால் எனக்குத் தெரிவித்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.
பின்னூட்டங்களிலிருந்து வெட்டி ஒட்டியவை:
From: தாரகை Date: Nov 21, 2:09 am
காலத்தின் தேவையை அறிந்த மணியான இழை:-)
Dyslexia- defining a learning disability that impairs a person's ability to read and which can manifest itself as a difficulty with phonological awareness, phonological decoding, orthographic coding, auditory short-term memory, and/or rapid naming. (http://en.wikipedia.org/wiki/Dyslexia )
Dyslexia- எழுத்துக்குழப்பம் என்பதைவிட சொல்யெழுத்துக்கேடு எனலாம்.
> இது போல எழுத்துக் குழப்பங்கள் தங்கள் கண்களில் பட்டால் எனக்குத் தெரிவித்தால்
> நன்றியுடையவனாக இருப்பேன்.
பரவலாக உள்ளது.
தேவைப்படுமின், அடியேனின் இழைகள் சிலவற்றில் காணலாம்:-)
---------- ----------
From: Rajam Date: Nov 21, 2:29 am
//Dyslexia //
ஹ்ம்ம்ம்ம்... இதெ வேறெ எங்கெயோ வேற மாதிரிக் கேட்டமாதிரி இருக்கே,
எங்க மொழியியல் வகுப்பில் தொடங்கி:
http://en.wikipedia.org/wiki/Metathesis_(linguistics)
இந்தக் குழப்பம் எழுத்திலும் பேச்சிலும் உண்டு. எனக்குக் கணினித்
தட்டெழுத்தில் பலநேரம் குறுக்கிடும்.
பேச்சு மொழியில் இந்த //Dyslexia // என்ற "போக்கு" பழைய ஒரு மொழியிலிருந்து
("பழந்தமிழிலிருந்து"? யாருக்குத் தெரியும்?) சில தெலுங்குச் சொற்களை
உருவாக்கியது என்று கேள்வி. சரியோ தப்போ தெரியாது. உண்மை
தெரிந்துகொள்ள வேண்டுமானால் திரு திவாகர் போன்றவர் உதவலாம்.
--------------------
From: விஜயராகவன் Date: Nov 21, 3:50 am
It is difficult to say when an error in writing or speech becomes something with can be identified as a psychiatric disorder. To call டிஸ்லெக்சியா an எழுத்துக்குழப்பம் is an oversimplification.
The wikipedia defines it as "Dyslexiais a broad term defining a learning disability that impairs a person's ability to read,[1] and which can manifest itself as a difficulty with phonological awareness, phonological decoding, orthographic coding, auditory short-term memory, and/or rapid naming."
Perhaps if there is a consistent pattern in a person's speech or writing errrors - giving due allowance for cultural and environmental differences , one may establish a syndrome.
Manivannan makes a direct correlation with writing systems - with a pat on the back. I don't know how valid it is. Is it a case of ethnocentrism?
In my view, instead of looking for "errors" in writing or speech , we must concentrate on a single person and see if there is a consistency - to really find out about thisdyslexia
--------------------From: தாரகை Date: Nov 21, 4:13 am
> It is difficult to say when an error in writing or speech becomes
> something which can be identified as a psychiatric disorder
Psychiatric disorder?
Its neither a psychiatric disorder nor an intellectual disability. Its ONLY an impairment.
> In my view, instead of looking for "errors" in writing or speech , we
> must concentrate on a single person and see if there is a consistency
> - to really find out about thisdyslexia
Rather than concentrating on a single person & siding with discrimination, it would be worthwhile to study the present day Thamizh ethnic diversion from a very high Thamizh reading population to a sparse Thamizh reading group(s). What type of (r)evolutionary act transformed this change?
---------- ----------From: Hari Krishnan Date: Nov 21, 8:35 am
> இன்று கூட ஒரு கடிதத்தில் தருகிறேன் என்பதற்கு தருகேரீன் என்று ஒருவர்
> எழுதியிருந்தார்.
வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தட்டச்சு சொல்லித் தருவதிலும், தட்டிய தாள்களைத் திருத்துவதிலும், தட்டச்சுத் தேர்வுத் தாள்களைத் திருத்தும் பணியிலும் கழித்தவன் என்பதால், ஒருவர் செய்யும் எழுத்துப் பிழையிலிருந்தே அவர் என்ன முறையைப் பயன்படுத்தித் தட்டுகிறார் என்பது எனக்கு அவருடைய விரலே நேரில் வந்து சாட்சி சொல்வதைப் போலப் பிடிபட்டுவிம்.
தருகேரீன் என்று தட்டியிருப்பதற்குக் காரணம், பயனர், ட்ரான்ஸ்லிடரேஷன் முறையைப் பயன்படுத்துகிறார். tha-ru-ki-rEn அல்லது tha-ru-ki-reen என்று தட்டவேண்டிய இடத்தில், tha-ru-kee-riin என்று தட்டியிருக்கிறார்.
ட்ரான்ஸ்லிடரேஷன் முறையில் தட்டுபவர்களுக்கு இப்படிப்பட்ட மாடுதற்றங்கள்...(அட தடுமாற்றங்களைத்தான் சொல்றேன்) ஏற்படுவது சகஜம். பலருடைய கடிதங்களில் ஜூ எல்லாம் ஜீ என்று மாறிவிடுவதைக் காணலாம். ஜீன் மாதம், ஜீலை மாதம், ஜீனியர் விகடன் என்றுதான் தட்டுவார்கள். இந்த இடத்தில் ட்ரான்ஸ்லிடரேஷன் காரணமில்லை.
There is a lot of a difference in typing juu or jU and jii and jI. though both keys are placed next to each. இது வடிவக் குழப்பம். எழுத்து வடிவத்தை மனத்தில் பதியாததால் ஏற்படும் குழப்பம்.
ஒருவிரலால் தட்டும்போது இப்படிப்பட்ட மாடுதற்றங்கள் நிறைய ஏற்படுவது சகஜம்.
டிஸ்லெக்சியா பிரச்சினையால் தருகிறேன் தருகேரீன் ஆகும் வாய்ப்பு உண்டு.
ஏனெனில், தட்டிக் கொண்டிருக்கும்போது, எந்த சீக்வென்ஸில் தட்டினோம், அடுத்தது என்ன எழுத்தைத் தட்டவேண்டும் என்பதற்கான மனப் பயிற்சியில் கணநேரப் பிறழ்வு ஏற்படும். (எழுதிய பிறகு அதை வாசித்துப் பார்த்துத் திருத்தவேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருப்பதில்லை. அது அவர்களுடைய நேரக் குறைவு என்று கொள்வோம்.)
தட்டச்சு முறையைக் கற்றுக் கொண்டால், டிஸ்லெக்சியாவின் சின்னக் கூறு இன்னமும் உள்ள என்னைப் போன்றவர்கள்கூட சீராகவும் பிழையின்றியும் தட்ட முடியும்.
---------- Forwarded message ----------
From: மணி மு. மணிவண்ணன் Date: Nov 21, 11:04 am
On Nov 21, 3:50 am, விஜயராகவன் wrote:
> It is difficult to say when an error in writing or speech becomes
> something with can be identified as a psychiatric disorder. To call
> டிஸ்லெக்சியா an எழுத்துக்குழப்பம் is an oversimplification.
அகராதியிலிருந்து:
dys·lex·i·a (ds-lks-)
n.
A learning disorder marked by impairment of the ability to recognize
and comprehend written words.
[New Latin : dys- + Greek lexis, speech (from legein, to speak; see
leg- in Indo-European roots).]
இது உளவியல் நோய் எல்லாம் இல்லை. மூளையில் நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு குறை. இதன் வெளிப்பாடு சொற்களைக் குழப்பி எழுதுவதில்
வெளிப்படுகிறது. இதற்கென்று மருத்துவக் கலைச்சொல் இருக்கிறதா எனத்
தெரியாது. ஆனால், ஆங்கிலச் சொல்லில் இருந்து கருத்தை நேரடியாக வெளிக் கொணரும் அதே நேரத்தில், இது நோய் என்றோ, வேறு எவ்வாறோ மட்டம் தட்டாமல் குறிப்பிடுவதற்காக “எழுத்துக் குழப்பம்” என்று குறிப்பிட்டேன். இப்போது தமிழிலும் “மாற்றுத் திறனாளிக்ள்” என்ற சொல் (alternatively enabled) பரவிக் கொண்டிருக்கிறது.
> Manivannan makes a direct correlation with writing systems - with a
> pat on the back. I don't know how valid it is. Is it a case of
> ethnocentrism?
அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை. எண்ணற்ற பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் நான் புரிந்து கொண்டதைத்தான் நான் எழுதியிருக்கிறேன். அதனால், நம் எழுத்து முறையைக் கொண்டாடவில்லை. நீங்கள் கூர்ந்து படித்திருந்தீர்கள் என்றால், தேவநாகரியிலும், தமிழிலும் உள்ள சிக்கல்களையும் சுட்டிக் காட்டி இருக்கிறேன். ஆனால், ஆராய்ச்சியாளர்கள் முடிவு என்னவென்றால், ஒலிக்குப் பொருந்தி வரும் எழுத்துருக்களில், நேர் வடிவங்களில் உள்ள எழுத்துகள் உள்ள மொழிகளில் டிஸ்லெக்சியாவின் தாக்கம் குறைவு. அந்த நோய் இல்லாமல் இல்லை. ஆனால், நோய்க்கு மருந்தாக மொழியின் நேர்வடிவம் அமைந்திருக்கிறது. மொழியில் எழுத்து, ஆங்கிலம்/பிரெஞ்சு போலக் குறைவடிவத்தில் இருந்தால், டிஸ்லெக்சியாவின் தாக்கம் கூடுதலாக இருக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இதை வெகுவாக ஆராய்ந்தே இம்முடிவுக்கு வந்திருக்கின்றனர்.
> In my view, instead of looking for "errors" in writing or speech , we
> must concentrate on a single person and see if there is a consistency
> - to really find out about thisdyslexia
எண்ணற்ற பல முறைகளில் ஆராய்ச்சியாளர்கள் இந்த நோயைப் பற்றி ஆய்ந்து வருகின்றனர். இந்த நோயைக் குணப்படுத்த எழுத்துகளை மாற்ற வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், எழுத்துக் குழப்பம் ஏற்பட எழுத்து வடிவங்களின் தன்மையும் இடைஞ்சலாக இருக்கிறது என்பது தெரிந்தால், அதற்கு ஏற்றவாறு குழந்தைக் கல்வி அமைய வேண்டும். இல்லையேல், பள்ளிகளில் குழந்தைகளை வீணாகத் தொந்தரவு செய்ய நேரிடலாம்.
தமிழ்நாட்டில் ஆங்கிலம் ஒரு பாடமொழியாக மட்டும் இருந்த காலத்தில்
டிஸ்லெக்சியாவின் தாக்கம் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆங்கிலம்
கற்பிக்கும் மொழியாகவும் ஆகிவிட்டதனால், டிஸ்லெக்சியாவின் தாக்கத்தைத் தமிழ்ப் பெற்றோர்களால் நன்றாகவே உணர முடிகிறது.
சில குழந்தைகளுக்குக் கற்பதில் ஆர்வம் குறைவதும், கற்க முடியாமல்
திணறுவதும், அதனால் பள்ளியை விட்டு விலகுவதும் அன்றாடம் கல்வித்துறை பார்க்கும் நிகழ்ச்சிகள். இவற்றை ஓரளவுக்காவது புரிந்து கொண்டால், குழந்தைக் கல்வியில் இருக்கும் சிக்கல்களைக் குறைக்க முடியும்.
இது இன்னும் முழுமையாகப் புரிபடாத நோய். ஆனால், இதற்கான இடைக்காலத் தீர்வுகள் இருக்கின்றன. பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை, மருத்துவர்கள் என்று எல்லோரும் கலந்து செயலாற்ற வேண்டிய துறை இது.
பெருநகரங்களில் இதைப் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும்,
சிற்றூர்களிலும், பேரூர்களிலும், இதைப் பற்றி அவ்வளவாகத்
தெரிந்திருக்காது.
இதற்கிடையில், குழந்தைகளுக்கு உதவுகிறேன் பேர்வழி என்று எழுத்தைச்
சீர்திருத்தம் செய்யக் கிளம்புபவர்கள் குட்டையை மேலும் குழப்பிவிடக்
கூடும். அதனால், எழுத்துச் சீர்திருத்தம் செய்கின்ற பேர்வழிகளை இதைப்
பற்றியும் முறையாகக் கள ஆய்வு செய்ய வற்புறுத்த வேண்டும்.
அன்பின் ஹரி,
நீங்கள் குறிப்பிட்டது மிகவும் முக்கியமான பார்வை.
நானும் முறையாகத் தட்டச்சு பயின்றவன். வெகுவேகமாத் தட்டச்சிடும்போது
எனக்கும் இட வல மாற்றம் (தட்டச்சில்) ஏற்படும். இடது பக்கத்தில் வர
வேண்டிய எழுத்துக்கு முன்னரே வலது பக்க எழுத்து விழுந்து விடும். எனது
தட்டச்சின்மேல் எனக்கு நம்பிக்கை கூடுதல் என்பதால், பல முறை, நான்
தட்டச்சிட்டதைப் படிக்காமலேயே அனுப்பி விடுவேன்.
இளமைப் பருவத்தில் விழாத இடவல மாற்றப் பிழைகள், அண்மைக்காலத்தில்
அடிக்கடி விழுகின்றன. அதற்கும் சர்க்கரையின் அளவுக்கும் தொடர்பு
இருக்கக்கூடும் என்பது உங்கள் கடிதத்தில் இருந்துதான் தெரிந்து
கொண்டேன்.
இந்த தட்டுப் பிழை வேறு. எழுத்துக் குழப்பம் வேறு.
இடது கைக்காரர்களால் வலது கைக்காரர்கள் உருவாக்கிய உலகில் வாழ்வதில் சிக்கல்கள் எவ்வளவு இருக்கின்றனவோ, அதே போல்தான் டிஸ்லெக்சியாவால் நொந்திருக்கும் குழந்தைகள்/பெரியவர்களுக்கும். இதன் முதல் கட்டம், இதை ஆராய்ச்சி செய்வதே.
டிஸ்லெக்சியா என்று ஒரு நோயைப் பண்டைக்காலத்திலேயே தமிழர்கள் கண்டறிந்து அதற்கு ஏற்றாற்போல வரிவடிவங்களை அமைத்தார்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள் வருகிறேன் என்று யாரேனும் தவறாக நினைத்துக் கொண்டால், அதற்கு நான் பொறுப்பல்ல.
பண்டைக் கால மனிதர்கள் நம்மைப் போலவே அறிவுள்ளவர்கள். அவர்கள் சூழலுக்கு ஏற்றாற்போல அவர்கள் தம் உலகைப் படைத்துக் கொண்டார்கள். உணவே மருந்து, மருந்தே உணவு என்று அவர்கள் வாழ்ந்தது நமக்கு இன்று வியப்பளிக்கலாம்.
டிஸ்லெக்சியா நோய் எப்போது தோன்றியிருக்கும் என்று ஆய்வாளர்களுக்குத்
தெரியவில்லை. ஆனால், இந்த மூளைநோய், எழுத்துகளை உருவாக்குவதற்கு
முன்பும் இருந்திருக்க வேண்டும். ஆனால், எழுத்து முறை தோன்றிய போது
வெளிப்பட்டிருக்க வேண்டும். நோயைப் புரிந்து கொள்ளாமல், மாணவர்களின்
திறனை மதிப்பிடும் நாடுகளில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கை இதனால்
வெகுவாகப் பாதிக்கப் படும்.
நீங்கள் சொல்வது போல் அன்றாட வாழ்வில் இட/வல மாற்றக் குழப்பங்கள்
உள்ளவர்கள் பலரைச் சந்தித்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலோர் இடது
கைப் பழக்கம் உள்ளவர்கள். நீங்களும் இடதுகைப் பழக்கம் உள்ளவரா எனத்
தெரியாது.
உங்கள் குறிப்பிலிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம், எழுத்துக்குழப்பம்
வேறு, தட்டுப் பிழை வேறு. ஒன்றுக்கு ஒன்றைக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
அப்படியானால், தருகேரீன் என்பது நிச்சயமாகத் தட்டுப்பிழைதான். இது
டிஸ்லெக்சியா இல்லை.
என் தேடல் தொடர்கிறது!
1 கருத்து:
டிஸ்லெக்சியா பற்றிய நல்ல பதிவு ஒன்றைப் படிக்கக் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கவும்:
http://tamilnanbargal.com/tamil-blogs/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
கருத்துரையிடுக