2010ல் நடந்த செம்மொழி மாநாட்டின் தமிழ் இணையம் 2010 அரங்கில் ஓர் அமர்வுக்கு நான் தலைமை தாங்கினேன். (அது பற்றிய பதிவை http://kural.blogspot.com/2010/07/blog-post.html என்ற சுட்டியில் காணலாம்). இன்னோர் அமர்வில் நான் கட்டுரை படித்தேன்.
தமிழ் தரவுத் தளங்கள் என்ற தலைப்பிலான இந்த அமர்வுக்குத் தமிழ் மரபு அறக்கட்டளையின் திருமதி சுபாஷிணி டிரெம்மல் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்கள். இந்த அமர்வில் கட்டுரை வாசித்தவர்கள்:
1. திரு.மணி மணிவண்ணன் (கலிபோர்னியா & சென்னை) - தமிழ் ஆவணங்களுக்கான நீண்ட கால பராமரிப்பு வழி முறைகள்
2. திரு.மணியரசன் (மலேசியா) - இணையத்தில் தமிழ் மின் அகராதிகள்: ஒரு பார்வை
3. முனைவர்.கா.துரையரன் (சென்னை) - இணையத்தில் தமிழ் நூல்கள்
4. முனைவர்.கு.கல்யாண சுந்தரம் (சுவிஸ்லாந்து) - தமிழ் மின்னணு நூலகத்தின் ஆக்குமுறை
இந்த அமர்வுகளின் காணொளிப் படங்கள் கீழ்க்காணும் சுட்டிகளில் உள்ளன:
http://www.youtube.com/watch?v=47WcSQ35O7U (Umar Thambi A1.flv - மணிவண்ணன் 1)
http://www.youtube.com/watch?v=78whvIXjgh0 (Umar Thambi A2.flv - மணிவண்ணன் 2)
http://www.youtube.com/watch?v=OSbwnUXkE-Y (Umar Thambi A3.flv - மணிவண்ணன் 3)
http://www.youtube.com/watch?v=LuGl-pyr6Ww ( Umar Thambi A4.flv - மணிவண்ணன் 4)
http://www.youtube.com/watch?v=uuEnaSA0DpU
http://www.youtube.com/watch?v=BgfVYDf7XlA
http://www.youtube.com/watch?v=AN2UxOQvNPw
http://www.youtube.com/watch?v=pjjiXUvFEjQ
http://www.youtube.com/watch?v=UhR7mDWs1p8
http://www.youtube.com/watch?v=L6M09QmTx-A
http://www.youtube.com/watch?v=ztAxGntAwn4
http://www.youtube.com/watch?v=-8s9KyAsFtw
http://www.youtube.com/watch?v=X2wW1JpyeE4
http://www.youtube.com/watch?v=5MXm357UjIo
http://www.youtube.com/watch?v=5MXm357UjIo
http://www.youtube.com/watch?v=tgzKyEoUf84
எனது கட்டுரையை கூகிள் ஆவணக் களரியில் சேமித்திருக்கிறேன். கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்கினால் படிக்கலாம்:
https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B4QIwxkSE9aDOWVkZDE0NGQtYWE2My00M2U5LWFiOTQtOTU2NzJmOTVlYTgx&hl=en
கட்டுரையின் படக்காட்சியையும் அதே களரியில் சேமித்திருக்கிறேன். அதைக் கீழ்க்காணும் சுட்டியில் படிக்கலாம்:
https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B4QIwxkSE9aDMTk4OGUyOWQtNzNlYi00NDY0LWIyZTItNWFkZThhZTZhNDM5&hl=en
எனது பேச்சைப் பார்த்து விட்டுக் கவிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்கள் மின் தமிழ் மடலாடற்குழுவில் கருத்து தெரிவித்திருந்தார். அவர் எழுதிய முழுக் கடிதத்தையும் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்:
http://groups.google.com/group/mintamil/msg/ada1600576b3536d?
அதற்கு என் விடையைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.
http://groups.google.com/group/mintamil/msg/48d883ff2ce15aed?
இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து எழுத இன்னும் நிறைய செய்திகள் உள்ளன. பொதுவாகவே நாம் நம் மரபுச் செய்திகளைப் போற்றுவதில்லை. பழைய கல்வெட்டுகளைக் கற்சுரங்கக் காரர்கள் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். போகி பண்டிகையில் நாம் ஏடுகளை எரித்திருக்கிறோம் என்கிறார்கள். ஏட்டுச் சுவடிகளைப் பெயர்த்தெழுதும் பழக்கத்தை விட்டிருக்கிறோம். பழைய ஆவணங்களை எண்ணிமப் படுத்தினால் மட்டும் பழைய கெட்ட பழக்கங்கள் போய் விடுமா என்ன?
சொல்லப் போனால், ஏடுகளும் காகிதங்களும், ஏன் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் கூட பல ஆண்டுகளைக் கடந்து நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றன.
இதோ இப்போது நான் எழுதியிருக்கும் இந்தப் பதிவு எத்தனை காலம் தாங்கும் என்பது கூகிளுக்குத்தான் வெளிச்சம்!
உங்கள் ஆவணங்களை அரசு எண்ணிமப் படுத்தப் போகிறது. அதை எப்படிப்பாதுகாப்பீர்கள்? அதை அரசு எப்படிப் பாதுகாக்கப் போகிறது? இருவருக்கும் இடையில் ஒரு குழப்பம் வந்தால் அதை யார் தீர்க்கப் போகிறார்கள்?
மாநாட்டுப் பேச்சைக் கேளுங்கள். ரொம்பவே மிரட்டுகிறீர்கள் என்று திருமதி சுபாஷினியும் ஹரி கிருஷ்ணனும் சொன்னார்கள். என்ன பயன்? இது வரை நான் சொன்னதை யாரும் கேட்டதாகவே தெரியவில்லையே?
தமிழ்.நெட்டில் 1997ல் நாங்கள் எழுதிய மின்னஞ்சல்களோ, soc.culture.tamil இல் 1990 களின் தொடக்கத்தில் நாங்கள் எழுதிய கடிதங்களோ இன்று முழுவதும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் படிக்க முடிவதில்லை. இதுதான் எண்ணிம ஆவணங்களின் நிலை.
உங்கள் வீட்டுப் பத்திரத்தை எப்படிப் பாதுகாக்கப் போகிறீர்கள்?
நிலத்திலும் புலத்திலும் பரந்தொரு தமிழ்க்கும்பலிருக்கின்றது
6 நாட்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக