Reflections on Tamil Nadu Election
3 மாதங்கள் முன்பு
ஒரு புலம்பெயர்ந்த அமெரிக்கத் தமிழனின் எண்ணங்கள்
1. பேராசிரியர் ம. ராஜேந்திரன், துணை வேந்தர்,மேற்காணும் பொருள் தொடர்பாக ஆய்வு செய்து, தமிழக அரசின் நிலையை மத்திய அரசுக்குத் தெரிவிப்பதற்கு ஏதுவாக, இக்குழு தனது அறிக்கையை விரைவில் வழங்கும்.
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
2. முனைவர் வா.செ. குழந்தைசாமி, முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தலைவர், தமிழ் இணையக் கல்விக் கழகம்.
3. பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன், தலைவர், ஐ.ஐ.டி., கான்பூர் (அறிவியல் நகரம், சென்னை)
4. பேராசிரியர் பொன். கோதண்டராமன் (பொற்கோ)
5. முனைவர் ஐராவதம் மகாதேவன், இ.ஆ.ப., (ஓய்வு)
6. பேராசிரியர் சோ.ந. கந்தசாமி, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
7. பேராசிரியர் கே. நாச்சிமுத்து, உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவை
8. பேராசிரியர் அ.அ. மணவாளன், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
9. முனைவர் ப.அர. நக்கீரன், இயக்குநர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை
10. முனைவர் மு. பொன்னவைக்கோ, முதன்மைக் கல்வி அதிகாரி, எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காட்டாங்குளத்தூர்.
11. திரு. வைரமுத்து, தமிழ் அறிஞர் மற்றும் கவிஞர்
12. திரு. அரவிந்தன், தகவல் தொழில்நுட்ப வல்லுநர், சிங்கப்பூர்
13. திரு. மணி மணிவண்ணன், முதுநிலை இயக்குநர் (கணினி), சீமேன்டெக் கார்ப்பரேஷன், சென்னை.
14. முனைவர் என். தெய்வசுந்தரம், சென்னை.
Re: [RKK] Peyar soota vaarungkal
மதிப்பிற்குரிய மாலன் அவர்களுக்கு,
தமிழில் உவெ(ம்)ப் லா(ங்)க் அமைத்ததற்கும், திசைகள் வலையிதழுக்கு வியக்கத்தக்க எண்ணிக்கையில் வாசகர்களை ஈர்த்ததற்கும் உளமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.
t 5/14/03 08:56 PM, you wrote:
>"Blog என்பதற்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்ன? Web Log என்ற சொல்லிலிருந்து
>தோன்றியது blog. எனவே இணையப்பட்டி, இணைப்பதிவு, இணை-வரிசை
>(அலைவரிசை போல) அல்லது அதன் பயன்பாட்டுத் தன்மையைக் கருதி சிற்றிணை,
>அல்லது இணைக்குறிப்பு, குறிப்பிணை இப்படி அமையலாமா?"
பொதுவாக இணையம் என்ற சொல்லை இண்டர்நெட்டுக்கும் வலை என்ற சொல்லை உவெப், நெட் என்ற சொற்களுக்கும் புழங்கி வருகிறோம். உவெப் சைட் என்பது வலைத்தளம், இணையத்தளம் இல்லை. உவெப் பேஜ் என்பது வலைப்பக்கம். உவெப்ஸைன் என்பது வலையிதழ், இணைய இதழ் இல்லை.
எனவே உவெப் லாக் என்பதற்கு வலைக் குறிப்பு என்று சொல்லாக்கினால், ப்லாக் என்னும் குறும்(புப்) பெயருக்கு இணையாக வலைப்பு என்று சொல்லலாமா? வலைப்பு என்ற சொல் கொலோன் வலையகராதியில் இல்லை. அதனால் இந்தச் சொல் ஏற்கனவே வேறு பொருளில் தமிழில் இருந்திருக்க வாய்ப்பில்லை.
இல்லையேல் இன்னும் குறும்பாக, வலைப்பூ எனலாம். வலையிதழ் என்பது உவெப்சைன் என்பது போல வலைப்பூ என்பது உவெப்லாக் ஆகலாம். ஆனால், புலவர்கள் பொருட்குற்றம் காண்பார்கள்!
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்னும் இலக்கணத்தை மீறி இதற்கு இடுகுறிப்பெயரும் இடலாம். வலைக்குறிப்பு - வலைப்பு, வலைப்பூ, வறிப்பு, வலையரிப்பு(!), லைப்பு, லறிப்பு என்று விளையாடலாம்.
ஆனால், தமிழனுக்கு ஒரு கவிதையுள்ளம் உண்டு. இண்டர்நெட்டுக்குப் பல இதயங்களை இணைக்கும் மையம் என்னும் பொருள் தர இணையம் என்று சொல்லைப் படைத்தவன் தமிழன். பத்திரிக்கைகளுக்கு தினமலர், வார இதழ், ஆண்டு மலர், என்று பெயர் வைப்பவன் தமிழன். எனவே வலைப்பூ என்ற சொல் தமிழ் உள்ளங்களைக் கவரும் என்று எண்ணுகிறேன்.
அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.
வலைப்பூ, வலைத்தேனீ, குடில், ... என்பதெல்லாம் இலக்கியங்களில் பாவிக்கச் சிறப்பாக இருக்கும், ஆனால் தொழில்நுட்புக் கலைச்சொல்லாக இருக்க முடியாது என்றும் பதிவர்களால் உணரப்பட்டது. ஆகவே, “வலைப்பதிவு” என்ற சொல் இணையத்தில் வலம்வரலாயிற்று.
Podcast is defined as "a digital recording of a radio broadcast or similar program, made available on the Internet for downloading to a personal audio player."
பாதம், பொதி என்ற சொற்களைப் பற்றிச் சிந்தித்தேன். ஆடியோ பாட்காஸ்ட் என்பதற்கு பொதியொலிபரப்பு ( packetized audio) பொருந்துமோ என்று எண்ணிப் பின் கைவிட்டேன்.
I settled on the following as direct, simple and in line with familiar words that convey the meaning to people that are not familiar with the term or the concept.
ஆடியோ பாட்காஸ்ட் என்பதற்கு வலையொலிபரப்பு அல்லது வலையொலி என்பது பொருந்தும் (வானொலி, ஒலிபரப்பு என்ற பழக்கப் பட்ட சொற்களோடு ஒப்பிட்டு இவற்றையும் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.)
அதே போல், வீடியோ பாட்காஸ்ட் என்பதற்கு வலையொளிபரப்பு அல்லது வலைக்காட்சி பொருந்தும். (தொலைக்காட்சி, ஒளிபரப்பு போன்ற சொற்களிலிருந்து கிளைத்தவை இவை).
"வலையொலி and வலைக்காட்சி are brilliant. It hits the meaning and has a precedence. I love these terms. Let's use them wherever we can - and hope they gain acceptance like இணையம் and வலைப்பூ did."என்று விடையளித்தார்.
Dear Mani,
There is a big difference between 'translating' the names into Tamil and 'giving' them a name in Tamil.
Almost all people I've come in contact are quick to do the former. That's because, the second requires effort, skill, passion and the desire to propagate the usage of not only the name but also what it represents. Giving something a name is like branding. We need to think outside the box - something marketing people are trained to do :)
As you pointed out once, the names that came into existence with an original 'value' had successful imprints and had a direct impact on people. இணையம் is a classic example. When Tamils talk about இணையம், our minds don't translate the work to Internet or Web! It's just இணையம்! .... and the this word gets surrounded by different set of thoughts, action and content than the words like Internet or Web. (like to hear your thoughts on this!)
We don't need all words to have this impact -- we don't have sufficient material in our community to create or even desire for this impact :). However, words that prompt actions - like blogs, podcasts etc will be great if they have a name from a Tamil 'angle'. 'Angle' as it's used in PR :)
The names you gave for blog and podcasts are far better and has the values we desire in Tamil names :). For me, when I think வலைப்பூ or வலையொலி, different actions get trigged in my mind instead of resolving a pointer to blog or podcast. In programming talk, these words are no longer pointers but a different object inherited from the same base class -- hope I'm communicating this right.
While on this, I just completed the new generation of Sellinam - to be launched in this region free to all mobile subscribers. A large multinational has come forward to sponsor the service
I took your advice. It will have a complete menu navigation in Tamil. I took the liberty to coin some Tamil names -- and put it to test among the Indian expats who are working at shipyards and construction sites -- their only language is Tamil.
Some examples are: வந்தவை (Inbox), சென்றவை (Sent Items), செல்பவை (Outgoing), கோர்த்தவை (Drafts). Likewise, I thought through the 'status' messages purely from these users 'angle' instead of trying to impress them with a 'translation'. I'll send you the screen shorts later. Initial feed back -- they knew exactly what these words mean even without someone having to explain!
This subject is close to my heart -- thus the long email :)
anbudan,
~ MUTHU
இன்று ஒரு புதிய வலைச்சொல் கண்டேன்.
Bleg = A blog where one asks for donations; a cross between blog and beg.
இதைத் தமிழில் எப்படிச் சொல்லலாம்?
வலைப்பிச்சை
எனலாமா? மாங்கல்யப் பிச்சை, மடிப்பிச்சை போல இந்தச் சொல்லும் வழக்கில் வரலாம்.
அல்லது ஆங்கிலச் சொல்லைப் போல, பிச்சை என்பதை அப்பட்டமாகச் சொல்லாமல்
வலைச்சை அல்லது வலைப்பூச்சை
என்று பூடகமாகச் சொல்லலாமா?
அல்லது இதற்கு ஏற்கனவே தக்க சொல் புழக்கத்தில் இருக்கிறதா?
நண்பர்களே, என்ன நினைக்கிறீர்கள்?
அன்பின் இளங்கோவன்,என்று விடையளித்தேன். நண்பர் இளங்கோவன், ஏன் வலைப்பூ என்ற சொல் தக்கதல்ல என்பதற்கான வாதங்களை முன் வைத்தார்.
:-). "ஈவலை" என்பது "கொசு வலை" போல் ஈயைப் பிடிக்கும் வலை என்று தவறாகக் கொள்ள நேரிடலாம். நகைச்சுவை உணர்வுள்ள சொல் "ஈவலை" என்று வாசன் மகிழ்வார்!
blog என்ற சொல்லே அமெரிக்கர்களின் மொழியியல்பிலிருந்து பிறந்த குறுஞ்சொல். bleg என்பது மேலும் நகைச்சுவை கொண்ட சொல். begging blog என்பதைக் குறிப்பால் உணர்த்துகிறார்கள் ஆனால், begging என்பதை மட்டம் தட்டவில்லை. நல்ல செயலுக்குப் பிச்சை எடுக்கலாம், இல்லையா? பௌத்த, சமணத் துறவிகள் பிச்சையெடுத்து உண்ணும் நோன்பு நோற்கவில்லையா? இது போன்ற சொற்களைத் தமிழில் ஆக்கும்போது மொழி பெயர்ப்பதைவிடக் கருத்தை உள்வாங்கி தமிழின் தன்மைக்கேற்ப சொற்களைப் படைப்பது நல்லது என்பது என் கருத்து. வலைப்பூ அப்படி எழுந்த சொல்தான் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல!
அன்பின் மணிவண்னன்,
நண்பர் வாசனுக்கு மட்டும்தானா? எனக்கும்
ஈவலை என்றால் சிரிப்புதான் வருகிறது :-)
ஓரெழுத்துச் சொல்லான பூவைத் தூக்கிப் பின்னால்
வைக்கிறீங்க. ஆனால் ஈ யைத் தூக்கி முன்னாடி
வைச்சா எல்லாம் சிரிக்கிறீங்க. சிரிக்கிறமாதிரி ஒரு பெயர் இருக்கட்டுமே :-) (அதுவும் ஒரு பொருளோடு இருக்கிறது; )
பூ என்பதனைப் பலரும் வெகுவாகப் பயன்படுத்தும்
போதெல்லாம் உங்கள் நினைவு வரும் எனக்கு. மகிழ்ச்சியும் வரும்.
ஆனால் பாருங்கள், பூ என்று வைக்கப் போய், அதுவே தற்போது வேர்ச் சொல் போல் ஆகி, பிச்சையோடு புணர்ந்து/கலந்து பூச்சை ஆகிறது.
இதுவே, பல்கிப் பெருகிக் கொண்டே இருக்கும்
Web என்ற இந்த மிடையத்திற்கு நிறைய பொருள் பொதிந்த
வேர்ச்சொற்கள் தேவை என்று காட்டுகிறது.
அதே நேரத்தில் நவ பெயர்களான பூ போன்றவற்றில் எனக்கு
மனத்தாங்கல் இல்லை; bleg என்பதற்கு ஒரு நவப்பெயர் சூட்டலாம்; அது வலைப்பூ போன்று நவமாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.ஆனால், பூவையும் பிச்சையையும் கலப்பது பொருள் சேர் உத்தி நவ உத்தி என்ற இரண்டு உத்திகளையும் கலந்து விடுவது போல இருக்கிறது. அதுதான் எனக்கு யோசனை :-))
அன்புடன்
நாக.இளங்கோவன்கலைச்சொல் பற்றிய வாதங்கள் காரசாரமாய் முட்டி மோதிக் கொள்வது போல் இல்லாமல் நகைச்சுவையாய் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருந்த இந்தத் தொடரை எனது பின் வரும் வினாவோடு நிறைவு செய்தேன்.
நண்பர் ஈளங்கோவன் ;-)
வெகுநாட்களாக எனக்குள் ஓர் ஐயம்.
ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட இதைப் பற்றிச் சிந்தித்திருக்கிறார்கள்.
மூத்த மொழி என்பதால் தமிழ் இறுகி உறைந்து விட்டதோ?
தொன்மையும் தொடர்ச்சியும் வேண்டுவதால், அதற்கு இளகத் தெரியாதோ? தமிழில் விளையாட்டாகப் பேச முடியாதோ?
சரியோ தவறோ, அமெரிக்க ஆங்கிலச் சொல்லாக்கங்களைப் பாருங்கள். அதில் ஒரு விளையாட்டுத் தன்மை தெரியும். ஒவ்வொரு பத்தாண்டுக்கும் புத்தம் புதுச் சொற்கள் பல எழும். விழும். குழூஉக்குறிகள் வரும். போம். நல்ல படைப்பாளியின் கையில் இவற்றில் சில சாகா வரம் பெற்று நிலைத்து நிற்கலாம்.
எம்.டி.வி.யிலும், எஸ்.எம்.எஸ்.இலும், சொற்கள் சிதைந்து, அழிந்து,
கலந்து, குழம்பிப் பாகாகித் திரண்டு மீண்டும் மீண்டும் எழும், விழும்.
weblog வலைப்பதிவுதான். weblog எப்படி blog ஆகிற்று? weblogger என்ற
சொல் இல்லை, ஆனால் blogger வழக்கில் ஓங்கி நிற்கிறது.
blog -இலிருந்து bleg கிளைக்கிறது.
வேறு எந்த மொழியில் இது போன்ற சிதைவுகள் சொற்களாகும்?
செம்மொழிகள் உறைந்து போனவை என்பதால் இவை போன்ற ஒயிற் சொற்களைப் பிறமொழிகளிலிருந்து இரவல் வாங்க வேண்டியிருக்கிறதோ?
பாருங்களேன். உங்களுக்கு வலைப்பூ என்பது ஈவலைபோல் சிரிப்பாய்ச் சிரிக்கிறது. வலைச்சை என்பதெல்லாம் தமிழில் எடுபடாது என்று தோன்றுகிறது. டபிள்யூ டபிள்யூ டபிள்யூ என்பதையெல்லாம் டப் டப் டப் என்று சொல்லாடுவது போல் தமிழில் ஆடினால் ஔவைப்பாட்டிக்கு மினி ஸ்கர்ட் போடுவது போல் நகைப்புக்கிடமளிக்கிறதோ?
முந்திப் பிறந்தவள் செந்தமிழன்னைக்கு மூப்பு தட்டி விட்டதோ?
வினாவுடன்,
மணி மு. மணிவண்ணன்வேறு மொழிகளில் கலைச்சொற்களை அன்றாடம் படைக்கிறார்கள். எங்கள் தொழிலில் மென் கலன்களைப் பிறமொழியில் மொழி பெயர்ப்பதற்குக் கொடுக்கும் நேரம் வெகு குறைவு. அதற்குள் இருக்கும் சொல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் கலைச்சொல்லைப் படைக்க வேண்டும். அந்தத் தொழில் செய்பவர்களுக்கு இவ்வளவு பொறுமையோ, அக்கறையோ இருக்காது. அது தொழில் மட்டுமே.
சோக்ஷிகள், க்ஷாரம், ஆஹார சமீகரணம், யோகவாஹி, சஞ்சாயகி, வாஹகம், ஹரிதகிகாமலம், அப்ஜ இரத்தகிகாமலம், பாக்கியஜனக அனிஷ்கர்ஷம், சங்கோஜயத்வம், பிரதிலோம, விபாஜியத்துவம், பிரதி மாகேந்திரம், அவினா சத்வம், அவிபேத்யம், சமாந்திர சதுர்புஜம், அதிருசிய ரேகை, நிஷ்காசினி, வித்யுத்லகானிகம், வக்ர பாவித்வம், உஷத்காலம், ஆபாஸபிம்பம், ஜ்யாமிதி, கிருஷித் தொழில்தனித்தமிழ்க் கலைச்சொல்லாக்கம் செய்ய வேண்டும் என்று தமிழார்வலர்கள் பெருமுயற்சி செய்திருந்தாலும், கலைச்சொல்லாக்கக் குழுவினர் வடமொழிச் சொற்களையோ அல்லது ஆங்கிலச் சொல்லையோ அப்படியே கையாள்வதையே 1940களில் முறையாக் கொண்டிருக்கிறார்கள்.
இரா: சாஸ்திரம் என்ற சொல்லைக் காட்டிலும் நூல் என்ற சொல்லே மிகப் பொருத்தமாக உள்ளது. ஆதலால் நூல் என்ற சொல்லையே ஏற்றுக் கொள்ள உம்மை வேண்டுகிறேன்.இந்த உரையாடலைப் பற்றிக் குடியரசு ஏட்டில் எழுதிய இராமசாமிக் கவுண்டர் வையாபுரிப் பிள்ளையின் கொள்கையைப் பொதுமன்றங்களிலும் எதிர்த்து விளம்பரப் படுத்தாதனால் அவரால் பெரும் தீங்கு விளைவிக்க முடிந்ததே என்று வேதனைப் பட்டு “உட்பகையை” வெல்ல வேண்டியதன் கட்டாயம் பற்றி எழுதித் தன் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறார்.
வை: அரிய விஞ்ஞான கருத்துக்களைத் தொகுத்தும், விரித்தும், ஒழுங்குபடுத்திச் சிறந்த வகையில் கூறுவது சாஸ்திரம் எனப்படும். ஆனால் நூல் என்பது ஏதேனும் ஒன்றைப் பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தக வடிவத்தைக் குறிப்பதாகும். ஆதலால் கணித நூல் என்பதைக் காட்டிலும் கணித சாஸ்திரம் என்பதே அதிகப் பொருத்தமுடையது.
இரா: தாங்கள் கூறிய இவ்விலக்கணத்திற்கு ஆதாரம் உளதோ?
வை: ஆதாரம் ஒன்றும் இல்லை. யாமே இவ்வாறு வகுத்துக் கொண்டு அதன்படியே பிறவிடங்களிலும் கையாண்டு வருகின்றோம்.
இரா: இது உமது சொந்தக் கற்பனையெனின், சாஸ்திரத்தின் இலக்கணத்தை நூலுக்கும் நூலின் இலக்கணத்தைச் சாஸ்திரத்துக்குமாக மாற்றி அமைத்துக் கொள்ளலாமே? நூல் என்ற சொல்லுக்குத் தாழ்ந்த பொருளும் சாஸ்திரம் என்ற சொற்கு உயர்ந்த பொருளும் கற்பிக்கப் படுவதன் நோக்கம் யாது?
வை: அது உலக வழக்கு.
இரா: நூல் என்பதும் சாஸ்திரம் என்பதும் ஒரு பொருள் குறிக்கும் இரு சொற்களாகவே உலகில் வழங்குகின்றன. வியாகரண சாஸ்திரம் என்பதும் இலக்கண நூல் என்பதும் ஒரு பொருளையே குறிக்கின்றன. மேலும், சென்னைப் பல்கலைக் கழகத்தாரால் பதிப்பிக்கப் பட்ட (Tamil Lexicon) தமிழ் அகராதியில் நூல் என்ற சொல்லு க்கு, "Systematic treatise, science சாஸ்திரம்” என்ற பொருள் குறிக்கப் பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளுவதா அல்லது தங்கள் புதிய பொருளைக் கொள்வதா?
வை: பல்கலைக் கழக அகராதியிலுள்ள பொருள் சரியன்று. அது அவசரத்தால் நேர்ந்த பிழையாகும்.
இரா: தொல்காப்பியத்தில் நூலுக்கு இலக்கணம் வகுக்கப் பட்டுள்ளது.
“ஒத்த சூத்திரம் உரைப்பிற் காண்டிகை, மெய்ப்படக் கிளந்த வகையதாகி யீரைங்குற்றமும் இன்றி நேரிதின் முப்பத்திருவகை யுத்தியொடு புணரின் நூலென மொழிப நுணங்கு மொழிப் புலவர்”
என்பது நூலின் இலக்கணமாயிருக்க உங்கள் விருப்பப்படியெல்லாம் தமிழர் மரபுக்கு முரண்படப் பொருள் கொள்ளுதல் முறையல்லவே?
வை: நூலும் சாஸ்திரமும் ஒரு பொருள் குறிப்பனவாயின் சாஸ்திரம் என்ற சொல்லை நீங்கள் ஏன் ஆட்சேபிக்கின்றீர்கள்?
இரா: சாஸ்திரம் என்பது வடசொல். நூல் என்ற தூய தமிழ்ச் சொல்லிருக்க அதே பொருளுடைய பிற சொல்லைப் புகுத்துதல் நீதியன்று. மேலும், இது தமிழ்ச் சொல்லாக்கக் கமிட்டியேயன்றி வடசொல்லாக்கக் கமிட்டியல்ல என்பதைப் பணிவுடன் நினைப்பூட்டுகிறேன்.
வை: சாஸ்திரம் என்பதும் தமிழ்ச் சொல்லேயாகும். அது தேவாரம், திருவாசகம் முதலிய சமய நூல்களில் ஆளப்பட்டுள்ளது. தமிழில் இரண்டறக் கலந்த சொல்லெல்லாம் தமிழ்ச் சொல் என்பதே எமது துணிபு.
இரா: உங்கள் கொள்கை எனக்கு வியப்பைத் தருகிறது. சாஸ்திரம் என்ற சொல் சமய நூல்களில் காணப் படலாம். ஆனால் அதனாலேயே அது தமிழ்ச் சொல்லாகாது. ஒரு சொல் தமிழ்ச் சொல்லா ஆரியச் சொல்லா என அறிவதற்குப் பல முறைகளுண்டு. அவற்றுள் ஒன்றினாலாவது உங்களது கொள்கையை நிலைநாட்ட முடியாது.
வை: அடிப்படையான கொள்கையிலேயே உமக்கும் எமக்கும் கருத்து வேற்றுமையுண்டு. ஆதலால் விவாதத்தை நிறுத்திக் கொள்வோம். கமிட்டித்தலைவர் திரு. கே. சாமிநாதன் தமது விருப்பப்படியே தீர்ப்புச் செய்துகொள்ளட்டும்.
இரா: அப்படியே ஆகட்டும். சாஸ்திரம் என்ற சொல்லே இக்கமிட்டியால் ஒப்புக்கொள்ளப்படும் என்பதை நான் அறிவேன். ஆனால், தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் நீங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறீர்கள் என்பதையும் பிற்காலத்தில் தமிழர்கள் வீறிட்டெழுந்து சீறுவாராயின் அவர்களுக்குச் சமாதானம் கூறும் பொறுப்பு உங்களுடையதாகும் என்பதையும் உங்கட்கு அறிவிக்கின்றேன்.”
[ மணி: பேரா. வையாபுரிப்பிள்ளை பல்கலைக் கழக அகராதிக்குழுவின் தலைவர். அவர் நூலையே அவருக்கு எதிராகச் சான்றுக்கு அழைத்திருக்கிறார் இராமசாமிக் கவுண்டர்! ]
“வடமொழியினின்றும் தமிழைக் காக்குமுன் உட்பகையுடைய தமிழரினின்றும் அதைக் காக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதைத் தமிழ் மக்களுக்குப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.”இதை 2011லிருந்து பார்க்கும் நமக்கு மலைப்பு மேலிடுகிறது. அன்று வையாபுரிப் பிள்ளையின் கொள்கை வென்றிருந்தாலும், இன்று சாஸ்திரம் என்ற சொல் தமிழ் கலைச்சொற்களில் வெறும் அடிக்குறிப்பு மட்டுமே. இயல், நூல் என்ற தனித்தமிழ்ச் சொற்கள் காலத்தால் நிலைத்து விட்டன. விஞ்ஞானம் என்ற சொல் 1960களோடு உறைந்து விட்ட சொல். விஞ்ஞானி என்ற சொல் மட்டும் வழக்கில் இருக்கிறது. இன்று அறிவியல் என்ற சொல்லே பெரிதும் வழங்கும் சொல்.